Monday, November 14, 2011

தனுஷுடன் கைகோர்க்கும் ஜெனிலியா-ஹன்சிகா..!!


ஆஸ்கார் பிலிம்ஸ் புரொடக்‌ஷனில் தனுஷ் நடிக்கும் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தனுஷ் அவரது மனைவி இயக்கும் 3 என்ற படத்தில் ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து நடித்து வருகிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மாரீசன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கப் போகிறார். மாரீஸன் படத்தில் தனுசுடன் சேர்ந்து ஜெனிலியாவும், ஹன்சிகா மோத்வானியும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்கள் இருவருமே தனுஷுடன் ஏற்கனவே நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

தற்போது தனுஷ் நடித்த மயக்கம் என்ன படமும் ரிலீசுக்கு தயாரிக்கி சிம்புவின் ஒஸ்தியுடன் போட்டி போட போகிறது. இந்த இரண்டு படத்தின் கதநாயகியும் ரிச்சா கங்கோபத்யாயி தான் என்பது குறிப்பிடதக்கது. இரண்டு படமும் நன்றாக ஓட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை வேற செய்து வருகிறாராம்.



முக்கிய குறிப்பு:-
தற்போது நீங்கள் மேலே படித்த செய்தியில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்...

Subscribe to get more videos :