விக்ரம், செரீன் கான் நடிக்கும் கரிகாலன் படத்தின் ஷுட்டிங் பின்னி மில்லில் நடந்து வருகிறது. பொதுவாகவே சென்னையில் மழையடித்தால் ஒரு புறம் கொசுக்கள் மிதக்கும். மறுபுறம் மனிதன் மிதப்பான். ரெண்டையும் சகித்துக் கொள்ள டாஸ்மாக் உதவியோடு 'மிதக்கும்' ரசனைவாதிகளும் அதிகம்.
மழைக்காலத்தில் படப்பிடிப்பு நடத்த சவுகர்யமான இடம் இந்த பின்னி மில்தான். மிகப்பெரிய ஏரியாவில் மூடப்பட்ட தளமே இருக்கிறது. இதற்குள் நுழைந்துவிட்டால், மழையாவது இடியாவது. எதுவும் தாக்காது என்ற நம்பிக்கையில் போய் இறங்கிவிட்டார்கள்.
செரீனாவை பார்த்தால் சமானியன் கண்கள் கூட காட்டு கொசுவாக மாறி கடிக்க துவங்கிவிடும். அப்படியிருக்கும்போது கொசுக்கள் விடுமா? பாய்ந்து குதறிவிட்டதாம். (அத்தனை கொசுவும் கலர் கொசுவாகியிருக்குமே?)
இந்த பிரமாண்ட பின்னி மில்லில் இப்போது அக்கம் பக்கத்து ஏரியாவிருந்தும் கூட கொசுக்களின் கூட்டம் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறதாம். பகலையே கூச வைக்கும் வெளிச்ச விளக்குகள் இருக்கும்போது பிரச்சனையில்லை. இரவில் செட் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பாடுதான் திண்டாட்டம். காலையில் ஒவ்வொருவர் முகமும் கொழுக்கட்டையாக வீங்கி போவதால் பின்னி மில் என்றாலே ஜன்னி வந்தது போல் அலறுகிறார்கள் அவர்கள்.