Tuesday, November 8, 2011

அஜித்-விஜய் இணையும் இன்னும் ஒரு படம்..!!!



ரஜினி, கமல், அஜீத், ராமராஜன் என சகட்டுமேனிக்கு அனைவரின் படங்களையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படம் தமிழ்ப் படம் . 2010-ம் ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றான இந்தப் படத்தை சி எஸ் அமுதன் எடுத்திருந்தார். 

மக்கள் இந்தப் படத்தை ரசித்தாலும் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் கடுப்பிலிருந்தார்கள்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு மகா நக்கலான திரைக்கதையுடன் அடுத்த படத்தை ஆரம்பிக்கிறார் சிஎஸ் அமுதன்.  
இந்தப் புதிய படத்துக்கு அவர் வைத்துள்ள பெயர் "தலவலி".

இந்தப் படத்தின் நாயகர்கள் அஜீத் – விஜய். அதாவது இந்த இருவரைப் போன்ற தோற்றம் உடைய இருவர் நடிக்கப் போகிறார்கள். படம் முழுக்க அஜீத் – விஜய் பற்றிய நக்கல்தான் பிரதானமாக இருக்குமாம். 

அதை சிம்பாலிக்காக சொல்வதுபோலத்தான் தலவலி என்று தலைப்பிட்டுள்ளாராம் அமுதன்.

Subscribe to get more videos :