டைரக்டர் சுசீந்திரன் அடுத்து இயக்கும் படத்திற்கு வீர தீர சூரன் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார். இது தொடர்பாக டைரக்டர் சுசீந்திரன் அளித்துள்ள பேட்டியில், ராஜபாட்டை படத்துக்கு பிறகு நான் இயக்கும் படத்திற்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைத்திருக்கிறோம். விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கிலும் இந்தப் படம் தயாராகிறது. தெலுங்கில் வேறு ஹீரோ. மற்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. முழுக்க முழுக்க காமெடி கதை இது. நானே எழுதிய கதை. மற்ற விவரங்களை பின்னர் சொல்கிறேன், என்று கூறியுள்ளார்.
தற்போது ராஜபாட்டையில் முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக கூறியிருக்கும் சுசீந்திரன், ராஜபாட்டை விக்ரமின் கலர்ஃபுல் படமாக வந்துள்ளது. 14 கெட்டப்புகளில் வருகிறார். அவர் நடிப்புக்கு நல்ல தீனி. எனக்கும் பெரிய வேலைதான். பெரும்பகுதி முடிந்துவிட்டது. 4 பாடல்கள். அவற்றில் ஒன்றில் ஸ்ரேயாவும் ரீமா சென்னும் ஆடுகிறார்கள். இந்தப் பாடலை இத்தாலியிலும், ஹீரோயின் தீக்ஷாவுடன் விக்ரம் ஆடும் இன்னொரு பாடலை ஆஸ்திரியாவிலும் எடுக்கிறோம். டிசம்பரில் ராஜபாட்டை வெளியாகும், என்று கூறியிருக்கிறார்.