அதிமுகவில் வடிவேலு! கடந்த வார பரபரப்பு செய்தி இதுதான். வடிவேலு அதிமுகவில் சேர்ந்துவிட்டால், சிங்கமுத்து என்னாவார் என்ற கேள்வி மனதில் எழுமல்லவா? நமக்கும் அப்படி ஒரு கேள்வி எழ, சிங்கமுத்துவுக்கே போன் அடித்தோம்.
அதுவா...? என்று அட்டகாசமாக சிரிக்க ஆரம்பித்தவர், வாங்க நேர்ல பேசலாம் என்றார். அவரது பதில்களில் ஒரு ஆக்ஷன் சினிமாவை பார்த்த மாதிரி அத்தனை விஷயங்கள் அடங்கியிருந்தன...
வடிவேலு அதிமுக வில் சேரப்போகிறாராமே?
நானும் அந்த விஷயத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நல்ல ஆட்சி வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காக அரும்பாடு பட்டவர் வடிவேலு. கலைஞருடைய திட்டங்களை காப்பியடித்துதான் தேர்தல் அறிக்கையை அம்மா தயாரித்தார்கள் என்று சொன்னவர்தான் இவர். எல்லாரும் திமுகவுக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று இவர் வியர்வை வடிய கூக்குரலிட, அதை அழகிரி துடைக்க... அப்படியெல்லாம் அதிமுகவுக்கு எதிராக வியர்வை சிந்தியவர்தான் வடிவேலு. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்தான் போலீஸ் மந்திரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மிதப்பில் திரிந்தவர் அவர். இப்போது எங்கள் கட்சிக்கு வரப்போகிறாராமா?... மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...