‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னுடா’ என்று சவால் விட்ட போலீஸ் கதைளில் ஒன்றுதான் இதுவும். காக்கி சட்டையில் காமெடி பட்டனை தைத்து ஒரு புதுரக யூனிபார்ஃம் ரெடி பண்ணியிருக்கிறார் டைரக்டர் தரணி. பாதி வசனங்களை சிம்புவே எழுதியிருப்பார் போல. அப்பாவை போலவே அநியாயத்துக்கு சுய புராணம்.
ஒரே அம்மா, ரெண்டு அப்பா. இப்படியொரு மாற்றான் தந்தை சூழலில் வளரும் சிம்பு, வளர்ந்து பெரியவராகி இன்ஸ்பெக்டர் ஆகிவிடுகிறார். ஆனாலும் தனது புது அப்பா மீதும், அவருக்கு பிறக்கும் ரெண்டாவது மகனான தன் தம்பி மீதும் மாறாத கோபத்திலிருக்கிறார். அண்ணனுக்கு எதிராக தம்பியை திசை திருப்புகிறது வில்லன் கோஷ்டி. ஒருகட்டத்தில் உண்மை தெரியவர, தம்பியை தம்பியாகவும் தகப்பனை தகப்பனாகவும் சிம்பு ஏற்றுக் கொள்வதுதான் மெயின் கதை. இடையில் வரும் போர்ஷன்களை பெருமளவு லபக்கிக் கொள்ளும் வில்லன்-ஹீரோ மோதல்கள் முறையே தமிழ்சினிமாவின் நாலாவது ஐந்தாவது டிக்காஷன் ரகம் என்பதுதான் அன் சகிக்கபுள்.
ஒரு மசாலா படத்தில் ஹீரோவின் அறிமுகம் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கிறது சிம்புவின் என்ட்ரி. (அவ்வளவு பெரிய பெரிய சாலை வசதிகள் இருந்தும் ஏன் சுவற்றை உடைத்துக் கொண்டு அவரது ஜீப் உள்ளே வர வேண்டும்? மஸ்ஸ்ஸாலாவாம்) இவர் பெயர் ஒஸ்தி வேலன். சாதாரண கான்ஸ்டபுளின் கன்னத்தில் அறைவதில் ஆரம்பித்து, கமிஷனரை உதறல் எடுக்க வைப்பது வரை இந்த ஒஸ்தி வேலனின்... மேலும் படிக்க... இந்து லிங்கை கிளிக் செய்யவும்...

