Thursday, January 19, 2012

இது தாண்டி சினிமா - அத்தியாயம் 5

அத்தியாயம் 5 மானிடம் மாட்டிய சுடர்! சுட்டும் விழிச் சுடரின் சுந்தர அழகில் மயங்கிய அந்த கான் பாலிவுட்டுக்கு அழைத்தார். பட்சியும் அங்கே பறந்தது! அவர் படப்பிடிப்பு தளங்களுக்கு தன் அப்பாவையும் அழைத்துச் சென்றார். இந்த கான் நடிகரும் அதை பெரிசு படுத்தவில்லை! முதல் படம் படு சூப்பர் ஹிட்! ஒட்டு மொத்த மீடியாவும் இந்த நடிகையை கொண்டாடியது! அடுத்த படத்தில் மான் நடிகருடன் ஜோடி போட வேண்டி வந்தது! மான் நடிகர் ரொம்பவே முரட்டுத்தனமான ஆசாமி! ஒருமுறை தன் மனதுக்குப்பிடித்த ஐஸ்கட்டி நடிகையுடன் ஷாக் நடிகர் நெருங்கி நடித்ததற்காகவே ஷாக் நடிகர் நடித்துக்
கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்குப் போய் ஷாக்கை அடித்து உதைத்து சுளுக்கெடுத்தார் மான். அந்த அளவிற்கு.... தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற பொஸஸிவ்னஸ் மனோபாவம் உள்ளவர். இதே போல மீர் நடிகரோடும் கருத்து மோதல் கொண்டவர். இவரின் மூர்க்கத்தனத்தை இனியும் சகிக்க முடியாது என்று தெரிந்த ஐஸ்கட்டி ஓபராயோடு ஒட்டிக் கொண்டார். உடனே மான் ஓபராயை மிரட்டியதோடு ஐஸ் கட்டியையும் ‘நிம்மதியாக வாழமுடியாது’ என மிரட்டினார். மானிடம் இருந்து தப்பிக்க வேண்டுமானால் பச்சான் வீட்டுப்பிள்ளையை மச்சானாக்கிக் கொள்வதுதான் சிறந்த வழி என நண்பர்கள் ஆலோசனை சொல்ல... அதன்படி நடந்தது. இனி ஐஸ் கட்டியிடம் வாலாட்ட முடியாது என தெரிந்து கொண்ட மான் கைஃப் நடிகையை தன் ஆசை வளையத்துக்குள் கொண்டு வந்தார். இப்போது கைஃப்பும் மானின் தொல்லை பொறுக்காமல் பீர் நடிகரோடும், அக்‌ஷ நடிகரோடும் நெருங்கியிருக்கிறாராம். இப்படி தாதாவாகவே வலம் வரும் ஹீரோ மான்! அப்படிப்பட்ட மானிடம் மாட்டிக்கொண்ட இந்த பெண்மான் பல கஷ்டங்களை அனுபவிக்கத்தான் செய்தார். படப்பிடிப்பு தளத்தில் நடிகையை கூப்பிட்டு நேருக்கு நேராகவே .... ‘உன் அப்பாவை வீட்டோடு வைத்துக்கொள். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கெல்லாம் கூட்டி வரக்கூடாது! வேண்டுமானால் நான் உன் அப்பாவிடம் பேசட்டுமா?’ எனக் கேட்டுவிட்டார். மான் நடிகரின் மகிமைகளை அறிந்திருந்த சுடர் ‘இல்ல... வேண்டாம்! நானே சொல்லிடுறேன்!’ என்றார். ‘நீங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கெல்லாம் வரவேண்டாம்ம்ப்பா!’ என சுடர் தயங்கித் தயங்கி சொன்ன போது.... அப்பா கடுப்பாகி விட்டார். சுடரோடு சண்டை போட்டார். ஆனால் மானின் வீரதீர பிரதாபங்களைச் சொல்லி அப்பாவை சமாதானப் படுத்தினார். வேண்டா வெறுப்பாக சம்மதித்தார் டாடி! இருந்தும் செல் போன் மூலம் அவ்வப்போது பேசி கண்ட்ரோல் பண்ணிக் கொண்டிருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பிற்காக லண்டன் செல்ல வேண்டியிருந்தது. அழாத குறையாக அப்பாக்காரர் ‘நானும் வருவேன்’ என அடம்பிடித்தார். ஆனால் அவரை விட்டுவிட்டுத்தான் கிளம்ப வேண்டியிருந்தது. இது அப்பா - மகள் தனிக்குடித்தனம் அளவுக்கு பிரச்சனையை வளர்த்து விட்டது! லண்டன் குளிருக்கு சுடரில் குளிர்காய்ந்த மான் நடிகர் ரெண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான ஷூ ஒன்றை வாங்கி பரிசளித்தார். வேறு வழியே இல்லாமல் அந்த பாலிவுட் கலாச்சாரத்தில் கலக்கத்தான் வேண்டியிருந்தது! அதென்ன பாலிவுட் கலாச்சாரம்? ( அடுத்த ஸீன் ) நன்றி தமிழ்சினிமா.காம்

Subscribe to get more videos :