எங்கேயும் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது 'மாசமா ஆறு மாசமா' என்ற பாடல். இது போன வருஷத்து ஹிட் என்றால் இந்த வருடத்திற்கு அதைவிட பிரமாதமான ஹிட் ஒன்றுக்கு மெட்டு போட்டிருக்கிறார் சத்யா. 'சேவற்கொடி' படத்தில் இடம் பெறும் அந்த 'கம்பி மத்தாப்பூ கண்ணு கண்ணு' பாடலை கேட்டுவிட்டு தேன் குடித்த நரியாகி கிடந்தார்கள் நிருபர்கள். இடம் பிரசாத் லேப் தியேட்டர்.
திரையில் விரிந்த பாடலுக்கு அழகாக அமைக்கப்பட்ட நடனக்காட்சி இன்னொரு பாட்டில் தேன். ஒவ்வொரு வரியையும் அப்படி செதுக்கி செதுக்கி எழுதியிருந்தார் கவிப்பேரரசு வைரமுத்து. சமீபகாலமாக புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்திற்கு இப்படி வரிகளை தீட்டியதில்லை அவர். (ஷங்கர் படங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக நெய்யக் கூடிய கவிஞரல்லவா அவர்?)
வண்டி வண்டியாக பேசும் டைரக்டர்கள், நம்மை ஆம்புலன்சில் ஏற்றுகிற அளவுக்கு படங்களை இயக்கியிருப்பார்கள். ஆனால் அதிகம் பேசவே இல்லை இப்படத்தின் டைரக்டர் இரா.சுப்ரமணியன். படம் வந்த பின் நீங்க பார்த்துட்டு சொல்லுங்க என்று முடித்துக் கொண்டார். டைரக்டர் பேசியதை விட தொகுப்பாளர் கவிதா சொன்னதிலிருந்துதான் படத்தை பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடிந்தது.
மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் :

