மூணே முக்கால் நிமிஷங்களும் கால தாமதமாகியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. நல்ல டயலாக் வருவதற்காக காத்திருந்து ஏதோவொரு படத்தில் 12 வது ரீலில் 'டைரக்டர் கார்டு' போடுவார் டி.ராஜேந்தர். கிருஷ்ணாவும் டி.ஆருக்கு சளைத்தவரல்ல.
யாரிடமும் அசிஸ்டென்ட்டாக நான் இருந்ததில்லை என்று அவர் கொடுத்த முன் பேட்டிகள் அத்தனையும் ப்ளஸ்சா, மைனசா என்று புரிவதற்குள் படமே என்டு ஆகிவிட, வீட்டுக்கு திரும்புகிற ஒவ்வொரு புருடன்களும் கதவை தட்டுவதற்கு பதிலாக ஜன்னலில் காது வைத்து வேவு பார்ப்பார்களோ என்ற சந்தேகம்தான் வருகிறது. ஹ்ம்ம்ம் கரெக்ட். படத்தின் கதை மனைவிகளை சந்தேகப்படும் கணவர்கள் பற்றியது.
நாலாவது குறுக்கு சந்தோ, எட்டாவது மொட்டை சந்தோ? ஒவ்வொரு ஏரியாவிலும் மனைவிகளை சந்தேகப்படும் புருடன்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டாவது இருக்கும். இந்த படத்தில் வருகிற அத்தனை கேரக்டர்களும் மனைவியை தாரை வார்த்துவிட்டு நிற்கிறதுகள்....இந்த விஷயத்தில் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கும் நண்பனை கைடு பண்ணும் கிருஷ்ணாவுக்கும் அப்படி ஒரு பிரச்சனை. நண்பனை காப்பாற்றும் அவர், தனது பிரச்சனையை எப்படி சரி பண்ணிக் கொண்டார்? சந்தேகம் என்ற கேவலமான ஜந்து இவரது குடும்பத்தை எப்படியெல்லாம் சீரழித்தது என்பதுதான் கதை.
அப்பாவி குருவி ஒன்றின் தலையில் எதற்கு பனங்காயை வைக்க வேண்டும் என்ற நல்ல மனம் கிருஷ்ணாவுக்கு. அவ்வளவு பெரிய கேரக்டரை தனது தலையில் சுமக்கிறார். அந்நியன் விக்ரம் போல அவர் மாறி மாறி நடிப்பது பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் வைக்க வேண்டிய தனி சிலபஸ். மருத்துவர்களிடம் கேட்டால் இதற்கு டிஸ்லொக்கியா டிசோசியா என்று ஒரு பெயர் வைப்பார்கள். ஆனால் படத்தில்... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://bit.ly/HawrDN