பாதி ராத்திரியில் விழித்துப் பார்த்தால் பக்கத்து பெட்டில் சித்தார்த் படுத்திருப்பாரோ என்று அஞ்சுகிற அளவுக்கு தமிழ்நாட்டுப் பக்கம் திரிந்து கொண்டிருக்கிறார் சித்தார்த். எப்படியாவது ஆந்திராவில் செட்டில் ஆன மாதிரி, தமிழ் சினிமாவிலும் ஷட்டில் ஆட வேண்டும் என்ற அவரது ஆசையின் அடுத்த முயற்சிதான் இந்த ஸ்ரீதர்.
ஊறுகாய் ஜாடியில் குளோப் ஜாமூனை ஊற வைத்த மாதிரி சித்தார்த் விஷயத்தில் எல்லாமே டகால்டியாகதான் முடிகிறது. அப்படியிருந்தும் ஸ்ரீதர் எப்படி?
ஸ்ருதிஹாசனும் இவரும் பிரண்ட்ஸ். ஒண்ணாம்ப்பு காலத்திலிருந்தே தொடரும் இந்த பிரண்ட்ஷிப்பில் இருவரும் விரல்களை ஒரு மாதிரி கோர்த்துக் கொண்டு இதுதான் 'ஃபிரண்ட்ஷிப் சிம்பல்' என்கிறார்கள். இந்த கண்றாவியெல்லாம் மற்றவர்களுக்கு எங்கே புரிகிறது? ரெண்டு பேரும் கண்ணாலம் செய்து கொள்ளப் போவதாகவும், திக் லவ்வர்ஸ் என்றும் தானாகவே கருதிக் கொள்கிறது ஊர். அவ்வளவு ஏன்? பெற்ற அம்மா அப்பாவே அப்படி நினைக்க, நிலை குலைந்து போகிறது ரெண்டு பேர் மனசும்.
இத்தனைக்கும் ஸ்ருதிக்கு நவ்தீப் காதலராகவும், சித்தார்த்துக்கு ஹன்சிகா காதலியாகவும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஸ்ருதியும் சித்தார்த்தும் ஒன்றாகவே சுற்றுவதால் ஞே என்று விழிக்கிறார்கள் அவர்கள் இருவரும். ஜாலியாக கொச்சினுக்கு கிளம்பும் இந்த ஜோடிகள் போகிற இடத்தில் செம மொக்கை வாங்கும்படி அமைகிறது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்ருதியை தோள்களில் து£க்கி சுற்றுகிறார் சித்தார்த். அப்புறமென்ன? எல்லாமே டமால். கைகலப்பு வராத குறையாக பிரிகிறார்கள்.
இனிமேல் ஸ்ருதியை பார்க்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்து பிரிகிற சித்தார்த் மறுபடியும் அவரை சந்தித்தாரா? முடிவு.
பிள்ளை என்ன படிக்க வேண்டும் என்று விருப்பத்தை திணிக்கிற அப்பாவாக தணிகலபரணி நடித்திருக்கிறார். இவருக்கு எம்.எஸ்.பாஸ்கர் குரல் கொடுத்திருப்பதால், பரணியின் நரைத்த தலையும் நம் கண்களுக்கு வழுக்கையாகவே படுகிறது. (டப்பிங் அவ்வளவு யதார்த்தம்னு சொல்ல வந்தேங்க)... விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://bit.ly/KZP52p