'எனக்கு பாடல் வேண்டாம். என் தம்பிகள் வளரட்டும்' என்று வருங்கால சந்ததிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கியவர் கவிஞரும் பாடலாசிரியருமான அறிவுமதி. ஆனால் இவரால் வழிவிடப்பட்டு வாழ்வு பெற்ற தம்பிகள் அப்படியிருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. எந்தவொரு டைரக்டர் பாடல் எழுத அழைத்தாலும் 'டைட்டிலில் சிங்கிள் கார்டு வேணும்' என்கிறார்களாம். அதாவது எல்லா பாடலையும் எனக்கே கொடுங்க என்பதன் நாகரீக வெர்ஷன் அது. அது போகட்டும்... நாம் இங்கே சொல்ல வருவது அதுவல்ல.
கவிஞர் அறிவுமதியின் வரிகளில் தாஜ்நூர் இசையில் 'உயிர் விடும் மூச்சு' என்றொரு அற்புதமான இசை ஆல்பம் தயாராகிக் கொண்டிருக்கிறது. கம்பீரமும் தாய்மையும் கலந்த குரலில் கவிஞரே பேசியிருக்கும் இந்த ஆல்பத்தை கேட்பவர்கள் ஒரு நிமிடம் கண்கலங்கி போவது உறுதி.... செய்தி மற்றும் அந்த பாடலை கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....
http://bit.ly/LCplsu