Monday, July 16, 2012

சின்னத்திரைக்கு வந்த ஹீரோயின் -ஒரு அநியாய ரிட்டையர்மென்ட்



சினிமாவில் 'நோ பார்க்கிங்' போர்டு வைக்கிற போதுதான் டெலிவிஷன் பக்கம் ஒதுங்குவார்கள் கதாநாயகிகள். அறிமுகமாகும் போதே தாலியோடு வந்த நடிகை ஜோதிர்மயி, அடர்வனத்தில் புள்ளிமானாக ஓடியதுடன் நித்திய கண்டம் பூரண மேக்கப்பாக ஜொலித்து வந்தார் சினிமாவில். அவர் நடித்த படங்களில் 'பெரியார்' மட்டும்தான் 'யாரும்மா அந்த பொண்ணு?' என்று பலரையும் வியக்க வைத்தது.

அதற்கு முன்னும் சரி, பின்னும் சரி, ஒரு படமும் அவரது புகழை கூட்டியபாடில்லை. வெறுத்துப்போன ஜோதிர்மயி தனது சொந்த மண்ணான கேரளாவுக்கே பெட்டியை கட்டினார். போன இடத்தில் பொல்லாங்கு வந்து படுத்தி எடுத்தது தனிக்கதை.

கட்டிய கணவரும் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்துவிட, மறுபடியும் சினிமா என்ற தனது ஆசையை அப்படியே புதைத்துவிட்டு சின்னத்திரைக்கு ஷிப்ட் ஆகிவிட்டார் ஜோதிர்மயி. இத்தனைக்கும் தமிழிலிருந்து போன ஒன்றிரண்டு சினிமா வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்துவிட்டுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் அவர். மலையாள சேனல் ஒன்றில் கேம் ஷோ நடத்திக் கொண்டிருக்கிறாராம்.... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....!

http://bit.ly/PYi5ej

Subscribe to get more videos :