யார் வந்தால் இன்டஸ்ட்ரி கிடுகிடுக்கும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கணேஷ்பாபு. சத்யம் தியேட்டரில் நடந்த 'யமுனா' இசை வெளியீட்டுக்கு இவர் அழைத்திருந்தது கவிப்பேரரசு வைரமுத்துவை. அது இலக்கிய கவர்ச்சி என்றால் 'கலக்கிய' கவர்ச்சி ஒன்றும் வேண்டுமே? அதற்குதான் நமீதா. முன்னழகும் பின்னழகும் பிதுங்கி வழிய மூச்சிரைக்க வந்து சேர்ந்தார் நமீதா. 'வழிவிடுங்க வழிவிடுங்க' என்று ரசிகர்களை நெட்டித்தள்ளியபடி மேடைக்கு கொண்டு வந்தார்கள் அவரை. பிரசாதம் ரெடி. பிரசங்கமும் ரெடியானது.
'மேடையில இருக்கிற மச்சான்சுக்கும் கீழே இருக்கிற மச்சான்சுக்கும் என்னோட வண்ண்க்ம்' என்றார் நமீதா. மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரும் இத்தருணத்தில் மேடையில் இருக்க, நெளிந்தது அவர்கள் அல்ல. பத்திரிகையாளர்கள்!
வைரமுத்து சாரு பெரிய பெரிய படத்துக்குதான் பாட்டு எழுதும். இப்போ சின்ன படத்துக்கும் எழுதியிருக்கு. இதிலேர்ந்தே இந்த படம் வெற்றியாகும்னு தெரியுது. அந்த பாட்டெல்லாம் நல்லாயிருக்கு என்று நமீதா கொடுத்த சர்டிபிகேட்டுக்கு நல்ல கைதட்டல். தரிசனம் கொடுத்தாச்சு. அப்புறமும் அங்கேயிருந்தால் கவர்ச்சிக்குதான் என்ன மரியாதை? சட்டென்று இடத்தை காலி செய்தார் நமீதா. நல்லவேளை... ரசிகர்களும் இடத்தை காலி செய்யாமல் அமைதிகாக்க, மிச்ச நேரங்களை தனதாக்கிக் கொண்டார் கவிப்பேரரசு.... தொடர்ந்து செய்தியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...