கோடம்பாக்கத்தின் ஆகப்பெரிய தலைகள் எல்லாம் ஒன்று கூடி உருவாக்கியிருக்கும் 'துப்பாக்கி' இது. தொடாமலே வெடித்திருக்கிறது. சுடாமலே சாய்த்திருக்கிறது. இதற்கு முன் வந்த மிலிட்ரி கதைகளில் என்னவெல்லாம் இருக்குமோ, அத்தனையும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட மாறாமல் இருக்கிறது இதிலும். ஆனால் அதையும் தாண்டி சம்திங் ஸ்பெஷலாக இருப்பது விஜய்... விஜய்... விஜய்...!
மிலிட்டரி சரக்கு எப்பவுமே சுர்ர்ர்ருன்னுதான் இருக்கும்! முருகதாஸ் பிரிப்ரேஷனில் வெளிவந்திருக்கும் இந்த மிலிட்டரி சரக்கும் அப்படியிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் ஒன்று. கஜினி பட விவகாரத்தில் தன்னை போலீஸ் கைது செய்ய முனைந்ததிலிருந்தே டிபார்ட்மென்ட் மீது செம கோபத்திலிருந்திருப்பார் போலிருக்கிறது ஏ.ஆர்.முருகதாஸ். 'போலீசெல்லாம் சும்மா. மிலிட்ரிதான் கெட்டி' என்றும் சத்யனை விட்டு சொல்ல வைத்திருக்கிறார் க்ளைமாக்ஸ்சில்.
ஓய்வுக்காக ஊருக்கு வருகிற நேரத்தில் கூட 'ஓவர் டைம்' பார்க்க வைக்கிறது விஜய்யின் கடமை உணர்வு. அத்தகைய சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து தப்பித்து ஓடுகிற ஒருவனை பிடித்து வைத்து நையப்புடைக்கிறார் விஜய். அவன் வேறு யாருமல்ல, தீவிரவாத தலைமை இடுகிற கட்டளையை ஏற்று செய்யும் நு£ற்றுக்கணக்கான 'ஸ்லீப்பர் செல்'களில் ஒருவன். உடனடியாக மும்பையில் நடைபெறவிருக்கும் அதிபயங்கரமான குண்டு வெடிப்புகளை முன் கூட்டியே தடுத்து நிறுத்துகிறார் விஜய்.
ஒரே நேரத்தில் பனிரெண்டு ஸ்லீப்பர் செல்களை விஜய் டீம் சுட்டு வீழ்த்துகிற அந்த ஒரு சீனில் மட்டும், தனது சின்னஞ்சிறு மண்டையை நன்றாக வேலை பார்க்க விட்டிருக்கிறார் முருகதாஸ். அப்புறம் வழக்கமான ஜீபூம்பா ஹீரோயிச ஃபார்முலாவுக்கு கதையை தாரை வார்த்துவிட்டு அவர் ஒதுங்கிவிட, வில்லனை ஒண்டிக்கு ஒண்டி ஒரு கை பார்த்துவிட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றுகிறார் விஜய். (ஆமாம்... விஜய் பார்க்கிங் செய்த கார்களில் இருந்த குண்டெல்லாம் வெடித்ததா, இல்லையா?)
சில நேரங்களில் இதுபோன்ற யூனிபார்ம் கதைகளில் அன்பிட் ஹீரோக்கள் சிலர் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவதை கண்ணார கண்டு, காதோரம் புகைவிட்ட லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு விஜய்யின் ஃபிட்டிங்கும், ஸ்டைலும் 'மாஸ்ப்பா மாஸ்' என்கிற புளகாங்கிதத்தை... விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...