Saturday, March 16, 2013

பரதேசி - திரைப்பட விமர்சனம்


பாலாவின் ஆறாவது படம் இது. மனசுக்குள் ஆறாத படமும் கூட! தமிழ் சினிமாவில் அண்மையில் வெளிவந்த பீரியட் பிலிம்கள் பல வெறும் 'பீரியட்ஸ்' பிலிம் என்ற வகையிலேயே தரம் பிரிக்கப்பட்டு ரசிகர்களின் 'விஸ்பர்' மீது கல்லெறிந்துவிட்டு போயின. ஆனால் பாலா மண்புழுவை பற்றி படமெடுத்தால் கூட, அதிலும் ஒரு அழகிருக்கும். கூடவே அழுகையும் இருக்கும். வழக்கமாகவே பர்ஃபெக்ஷனுக்கு பக்கத்தில் நின்று படம் எடுக்கும் பாலா, தன் முந்தைய சில படங்களில் சறுக்கியும் இருக்கிறார். ஆனால் இந்த படம் எல்லா வகையிலும் ஒசத்திதான்! 

1939 களில் நடக்கிற கொத்தடிமைகளின் வாழ்க்கைதான் படம்! ஊரில் கொட்டடித்து திரியும் ஒட்டுப் பொறுக்கி அதர்வா. அவரை காதலிக்கும் பெண்ணாக வேதிகா. பஞ்சம் தலைவிரித்தாடுகிற கிராமத்தில் கங்காணி ரூபத்தில் வந்து சேர்கிறான் களவாணி ஒருத்தன். 'தேயிலை தோட்டத்துல வேலை. மாசமானா சம்பளம். இருக்கிற வரைக்கும் வேலை பார்த்துட்டு ஊர்ல வந்து காடு கழனின்னு வாங்கி போடு. மிச்சமிருந்தா கூத்தியா வச்சுக்க' என்று ஆசை காட்டியே ஊரிலிருக்கிற பாதி பேரை வளைத்துக் கொண்டு போகிறான். சுமார் 48 நாட்கள் நாவறண்டு போகிற பயணத்தை தாண்டி பசுமையான தேயிலை தோட்டத்துக்கு போனால், இடத்திலிருக்கிற பசுமை அங்கு யார் மனசிலும் இல்லை. கொத்தடிமையாக்கி கொன்று தின்கிறார்கள் இவர்களை. போதாத குறைக்கு வெள்ளைக்காரன் ஆசைப்பட்டால் போச்சு. கற்புக்கும் பிரச்சனை. 

ஊரிலிருக்கிற போது தன் ஆசை காதலி வேதிகாவை 'கூடி' ஒரு பிள்ளையையும் கொடுத்துவிட்டு இந்த கொத்தடிமைகளில் ஒருவனாக சிக்கிக் கொள்ளும் ஒட்டு பொறுக்கி அதர்வா அங்கிருந்து தப்பித்து வந்தானா? காதலியை சேர்ந்தானா? பதற வைக்கும் க்ளைமாக்சுடன் படத்தை முடிக்கிறார் பாலா. 

குடிக்கிற ஒவ்வொரு கோப்பை தேநீருக்கும் பின்னால் இப்படியொரு ரத்த சரித்திரம் இருப்பதை அறியும்போது பேசாமல் தேநீருக்கு பதிலாக '....த்திரத்தை' கூட குடித்துவிட்டு கூட சும்மாயிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

 உயிரை கொடுத்து நடித்தேன் என்பார்கள் சிலர். ஆனால் உயிரையே கொடுத்திருக்கிறார் அதர்வா. அந்த தேயிலை காட்டில் அவர் ஓடுகிற ஓட்டத்தை மறுபடி ரீவைண்ட் பண்ணி பார்த்தால் நமக்கு வலிக்கும். கங்காணி கொடுக்கும் விடுதலைக்காக ஆசையோடு காத்திருக்கும் அந்த முகம், இன்னும் ஒம்போது வருஷம், ரெண்டு மாசம் இருந்து கடனை அடைச்சுட்டு போ... என்று சொல்லும்போது சுருங்கிப் போகிறதே, அந்த ஏமாற்றத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் அதர்வா. ஐயா நியாயமாரே... என்று அவர் கதறி அழுகிற காட்சிகள் நெஞ்சுவலி ஆசாமிகளுக்கு ஆகவே ஆகாத ஏரியா. விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://j.mp/132QkJs


Subscribe to get more videos :