முருகதாசுக்கு ஏற்பட்ட அதே நிலைமைதான் இப்போது கவுதம் மேனனுக்கும்! இந்த பரமபத ஆட்டத்தில் முருகதாசாவது இப்போது ஏணியில் நிற்கிறார். ஆனால் கவுதம் மேனன்இருப்பதோ பாம்பின் விஷ பல்லுக்கு அருகில். அதனால் முருகரை போல 'போனால் போகட்டும் போடா...' மனநிலை இன்னும் வரவில்லை அவருக்கு!
துப்பாக்கி கதையை முதலில் தன்னிடம் சொன்ன முருகதாசிடம், 'கால்ஷீட் தர்றேன், வெயிட் பண்ணுங்க' என்று சொன்ன பிறகும் காத்திருக்காமல், அதை அப்படியே அச்சு பிசகாமல் விஜய்யிடமும் சொல்லி படமாக்கி ரிலீசும் செய்து விட்டார் முருகதாஸ். இதனால் இன்றுவரை முருகரிடம் இன்னொரு கதையை கேட்க விரும்பவில்லை அஜீத். அதனால்தான் 'தலயுடன் படம் பண்ணுற வாய்ப்பு இப்போதைக்கு இல்லை' என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு ஒதுங்கி விட்டார் முருகர்.
இதே நிலைமைதான் கவுதம் மேனனுக்கும். சூர்யாவிடம் ஒரு கதையை சொல்லி ஓ.கே வாங்கியிருந்தாராம். நடுநடுவே சில திருத்தங்களை மட்டும் சொல்லி வந்தார் சூர்யா. இந்த 'கேப்'பில் டாப் ஹீரோக்களான அஜீத் விஜய் இருவரிடமும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் கதை சொல்லியிருக்கிறார் கவுதம். அதுவும் சூர்யாவுக்கு சொன்ன அதே கதையை. மேலும் செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...