Wednesday, April 24, 2013

சிவகார்த்திகேயனை ஒழித்துக் கட்டுவேன்... சபதம் போட்டாரா தயாரிப்பாளர்?



ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வாங்கி வெளியிடும் படம் சூது கவ்வும். இதற்கு முன்பே 'சொன்னா புரியாது' என்ற படத்தை வாங்கி ரிலீஸ் செய்வதற்கு தயாராக இருந்தார் அவர். மே 1 ந் தேதி 'சொன்னா புரியாது' வெளியீடு என்று விளம்பரங்களும் வந்தன. ஆனால் திடீரென்று சொன்னா புரியாதுவை பெட்டிக்குள் வைத்து ஸ்டிராங்காக பூட்டிவிட்டு சூது கவ்வும் படத்தை வெளியிட முடிவு செய்து விட்டார் அவர். ஏன் இந்த திடீர் மாற்றம்?

பஞ்சாயத்து இல்லேன்னா எப்படி? இருக்கு ஒரு முக்கியமான விஷயம். இதே மே 1 ந் தேதி சிவ கார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைக்கு வருகிறது. இதை காலி பண்ண வேண்டும் என்பதற்காகவே சூது கவ்வும் படத்தை ஞானவேல்ராஜா இறக்க முடிவெடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுப்பு கிளம்பியிருக்கிறது.

அப்படியென்ன சிவ கார்த்திகேயன் மீது ஞானவேல்ராஜாவுக்கு கோவாச்சு? கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வெற்றிக்கு பிறகு சிவ கார்த்திகேயனிடம் அட்வான்ஸ் கொடுத்து ஆளை அமுக்க கோடம்பாக்கத்தில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒருவராக க்யூவில் நின்றாராம் ஞானவேல்ராஜா. சிவ கார்த்திகேயன் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, தற்போது சிவாவுக்கு மேனேஜராக இருக்கும் ராஜா என்பவர் ஞானவேல்ராஜாவிடம், நம்ம நண்பனை... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...


Subscribe to get more videos :