ஏப்ரல் 8 ந் தேதி சித்திக்கும் களஞ்சியத்துக்கும் எதிராக மொபைல் பேட்டியளித்த அஞ்சலி அதற்கப்புறம் இரண்டு நாள் கழித்து காணாமல் போனார். அவரை தேடி சல்லடை போட்ட போலீஸ், சென்னையிலிருக்கும் நடிகர் ஜெய்யையும் விட்டுவைக்கவில்லை.
மீடியாவும் போலீசும் மாற்றி மாற்றி நச்சரித்ததில், மனசொடிந்து போன ஜெய் மறுபடியும் அஞ்சலி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பிறகுதான் நிம்மதியானார். இந்த நிம்மதியை கொண்டாட வேண்டாமா? நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஈசிஆர் பக்கம் போயிருந்தாராம்.
கடந்த 13 ந் தேதி நள்ளிரவு கொண்டாட்டங்களையெல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் அத்தனை பேரும். ஆடி காரில் ஆடிக்காற்றே வெட்கப்படுகிற மாதிரி சிட்டாக பறந்து வந்தவர்களுக்கு ஒரு சிக்கல். அதிகாலை 4.30 மணிக்கு ஈக்காடுதாங்கல் அருகில் கார் நிலை தடுமாறி