'யார்றா நீங்கள்ளாம்?' என்று வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இந்து மக்கள் கட்சியின் போராட்டங்கள் குறித்து கமெண்ட் அடித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலும், 'என் கடன் குட்டையை கலைத்து கலாச்சார மீன்களை காப்பாற்றுவதே' என்று விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கிறது அக்கட்சி. சமீபத்தில் அந்த கட்சியின் சார்பாக போடப்பட்டிருக்கும் ஒரு வழக்கு தொலைக்காட்சி ஏரியாவை சூடாக்கியிருக்கிறது,
சென்னை: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
http://j.mp/XYs072