படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு கேரக்டர்தான் டைரக்டர் ஹரி. ஹீரோ மட்டுமல்ல, படத்தில் நடிக்கும் மற்றவர்களும் கூட எங்கு தங்குறாங்க, என்ன சாப்பிட்டாங்க என்று கேட்டு தெரிந்து கொள்கிற ஆள். 'நான் புரடியூசரோட டைரக்டர். ஆர்ட்டிஸ்டுகளுக்கு சாப்பாடோ, தங்குற இடமோ சரியில்லைன்னா அது ஷாட்ல வந்து பிரதிபலிக்கும். அதுவே காரணமாகி அந்த காட்சி முடிவதற்கு லேட்டாகும். நாலு டேக் வாங்குனா பிலிம் செலவு அதிகமாகும். எல்லாம் சேர்ந்து பட்ஜெட்ல இடிக்கும்' என்று நீண்ட விளக்கம் வைத்திருக்கிறார் இதற்கெல்லாம்.
பேச்சிலும் கூட வழ வழா டைப் இல்லை அவர். அதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் இங்கே. சிங்கம் ரிலீசுக்கு முன்பு ஒரு டி.வி. சேனலுக்கு படத்தின் புரமோஷன் பேட்டிக்காக அழைத்திருந்தார்களாம். போனவரிடம், 'இன்னைக்கு செவ்வாக்கிழமை. படம் வெள்ளிக்கிழமை ரிலீசாகும். இந்த பேட்டி ஞாயிற்றுக் கிழமை வரும். ஆனால் அதுக்குள்ளே படம் ரிலீசாகியிருப்பதால, தியேட்டர்ல படம் வெற்றிகரமா ஓடிகிட்டு இருக்கிற மாதிரி பேசிடுங்க' என்றார்களாம்.
'அது எப்படி? வெள்ளிக்கிழமை ரிலீசாகி நல்லா ஓடுதான்னு தெரிஞ்ச பிறகுதானே நான் நல்லா ஓடுதுன்னு சொல்ல முடியும். அதுக்குள்ளே சொல்ல சொன்னா எப்படி?' என்று எதிர் கேள்வி... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...