சென்னையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ரவிசங்கர்பிரசாத் (வயது 57). தாதா சாகேப் பால்கே விருது பெற்ற புகழ்பெற்ற தயாரிப்பாளரான எல்.வி.பிரசாத்தின் பேரனான ரவிசங்கர் பிரசாத், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., மயக்கம் என்ன, நண்பன் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
இவர் ஆனந்த் ரீஜென்ஸி என்ற பெயரில் பல்வேறு இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
இவருடைய ஓட்டல் ஒன்று ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநில பிராந்தியமான ஏனாமில் உள்ளது. இந்த ஓட்டலை பார்வையிடுவதற்காக ரவிசங்கர் பிரசாத் சென்றிருந்தார்.
நேற்று முந்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஓட்டலில் இருந்து வாக்கிங் செல்ல வெளியே புறப்பட்டார். அங்குள்ள கோதாவரி ஆற்றின் பாலம் அருகே சென்றவர் பின்னர் ஓட்டலுக்கு திரும்பவில்லை. அவர் கடத்தப்பட்டரா? அல்லது ஆற்றில் தவறி விழுந்து விட்டாரா? என்று தெரியவில்லை.
இதுபற்றி ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக ஏனாம் போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
ரவிசங்கர்பிரசாத் ஓட்டலில் அதிகாலை 3 மணி அளவில் வெளியே... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்... http://j.mp/1asuMco