Friday, July 26, 2013

சொன்னா புரியாது - விமர்சனம்



ஊர்ல இருக்கிற பார்ல எல்லாம், லேடீசுக்கும் சம அந்தஸ்து கொடுக்கிற
காலம் இது. இந்த ஃபாஸ்ட்புட் உலகத்தில் காதல் மட்டும் நோஸ்கட் ஆகாமலிருக்குமா என்ன? காதலையும் கல்யாணத்தையும் இளசுகள் எப்படி டீல் பண்ணுகிறார்கள் என்பதை அவர்களை 'பின் தொடர்ந்து' படமாக்கினால் எப்படியிருக்கும்? அப்படியொரு உணர்வைதான் தருகிறது இந்த 'சொன்னா புரியாது'. 

நாளொரு ஃபிகரும் பொழுதொரு பிக்கப்புமாக இருக்கிறார் சிவா. கல்யாணமே வேண்டாம் என்பதுதான் இவரது கொள்கை. ஆனால் விடாப்பிடி அம்மா, சிவாவை நச்சரித்து பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார். மணப்பெண் வசுந்தரா. குடும்பத்திற்கேற்ற குத்துவிளக்கு என்று இவரை கருத வைக்கிறது வசுந்தராவை பற்றிய பில்டப். இப்படியொரு பெண்ணை நம் தலையில் கட்டி வைக்கிறார்களே என்று சிவா வருந்தி, இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த திட்டமிட, இதே திட்டத்தோடு காத்திருக்கிறார் வசுந்தரா. இதைவிட பெரிய ஷாக், இந்த குடும்ப குத்துவிளக்கு நிஜத்தில் ஒரு சரக்கேஸ்வரி! 

ஒரு பாரில் இவர் மப்பேறி சரிந்து விழுகிற காட்சி ஃபேஸ்புக்கில் வெளிவர, அதை பார்த்து அதிர்ச்சியாகிறார் சிவா. இருவருமே சேர்ந்து பெற்றவர்களை ஏமாற்றிவிட்டு 'பிரேக் அப்' ஆகிறார்கள். அதையும் ஒரு பார்ட்டி வைத்து கொண்டாடுகிறது பிரண்ட்ஸ் வட்டாரம். அங்கே ஓவர் மப்பில் இருவரும் ஒரே படுக்கையறையில் ஒன்றாக இருக்க, எப்படி நடந்துச்சு இது என்கிற அதிர்ச்சியோடு... இன்டர்வெல்! 

அடப்பாவிகளா, சரோஜாதேவி புத்தகமே தேவலாம் போலிருக்கே என்று கலாச்சார காவலர்கள் கையில் கல்லோடு திரிய வேண்டாம். கலாச்சார முறுக்கை கண்டபடி நொறுக்குகிற அளவுக்கு காட்சிகள்... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.... 

Subscribe to get more videos :