கடலோர கதைகளை கண்டம் துண்டமாக சிதைக்கிற வியாதி அண்மைக் காலமாகவே பெருகி வருகிறது தமிழ்சினிமாவில். கடல், டேவிட் என்று மூச்சு வாங்கி உட்கார்ந்து மூணு மாசம் முடியல. அதற்குள் இன்னொரு 'முடியல...'
கடலோரத்தில் பிழைப்பு நடத்தும் மீனவர்களில் மரியான் மட்டும் டிபரன்ட்! எல்லாரும் வலையோடு கடலுக்கு போனால் இவர் மட்டும் 'சுளுக்கி'யோடு செல்கிறார். கடலுக்கு அடியில் சப்பணமிட்டு அமர்ந்து ஒரு கொக்கு போல தவமிருந்து கடல் சுறாவை அந்த சுளுக்கியால் கொத்திக் கொண்டு மேலே வருகிறார். கடல்ல அவ்ளோ பெரிய கப்பலே மிதக்கும்போது அந்த கப்பலில் பறக்கும் கொடியின் வெயிட் கூட இல்லாத இவரால் மட்டும் எப்படி சப்பணம் போட்டு உட்கார முடிகிறது? விடுங்கய்யா... ஒரு ஹீரோவுக்கு இப்படியொரு பில்டப் கூட இல்லேன்னா எப்படி?
கடல் சுறாவை வேட்டையாட தெரிந்த மரியானுக்கு காதல் மட்டும் செய்யவே தெரியவில்லை. இவரை விரட்டி விரட்டி நேசிக்கும் பனி மலரை எட்டி மிதிக்காத குறையாக விரட்டுகிறார். இவ்வளவு பெரிய கடுப்பு ராசாவான இவரை ஒரு பொன்மொழி அப்படியே திருப்பிப் போடுகிறது. அது?
'பொம்பள வாசம் இருக்கிறவனாலதான் வாழ்க்கையில சாதிச்சுகிட்டே இருக்க முடியும்' போகிற 'போட்'டில் இவர் நேசிக்கும் பார்வதியின் அப்பனே இப்படியொரு பொன்மொழியை உதிர்க்க, அதே ஊரிலிருக்கும் ஒரே ஒரு அழகான பார்வதி மீது காதல் கொள்கிறார் தனுஷ். விதி வில்லன் ரூபத்தில் வருகிறது. 'வாங்கிய கடனுக்கு பொண்ணை கொடு. இல்லேன்னா பணத்தைக் கொடு' என்று கழுத்தில் கத்தி வைக்காத குறையாக அவன் மிரட்ட, வார்த்தைக்கு வார்த்தை 'ஆத்தா...' என்று ஆசையோடு நேசிக்கும் கடலையே இழந்துவிட்டு வெளிநாட்டுக்கு கிளம்புகிறார் தனுஷ்.
ஏஜென்ட்டிடம் வாங்கிய பணத்தில் பார்வதியின் கடனை அடைத்துவிட்டுதான் இந்த பயணம். ரெண்டே வருஷத்தில் சொந்த ஊருக்கு திரும்புகிற நேரம், சூடான் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். இவர் பேசும் பாஷை அவர்களுக்கு புரியாமல் அவர்கள் பேசும் பாஷை இவருக்கு புரியாமல் ஒரு விலங்கை போல அவதிப்படும் தனுஷ் எப்படி அவர்களிடமிருந்து... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://bit.ly/18AOQFJ