மறுநாள் அஷ்டமி நவமி என்பதால் விடிய விடிய மல்லுக்கட்டி விடியற்காலை நாலு மணிக்குபாடல்கள் அடங்கிய டேப்பை தயாரிப்பாளர் வசம் ஒப்படைத்தார் யுவன்சங்கர்ராஜா. இது நடந்து ஒரு மாதமிருக்கும். இவ்வளவு அக்கறையாக நாள் நட்சத்திரம் பார்த்தும் பிரியாணி பாடல்கள் அத்தனையையும் இன்டர்நெட்டில் ரிலீஸ் செய்துவிட்டதாம் கோஷ்டி. இது அடுக்குமா, அநியாயம் என்றெல்லாம் ஆவேசப்பட்ட(தாக சொல்லப்பட்ட) பிரியாணி டீம் இன்று காவல் துறையிடம் புகார் கொடுக்க நேரில் சென்றது.
பொதுவாக இப்படி உள்குத்துகள் இங்கே நடப்பதுண்டு. இன்டர்நெட்டில் தாங்களாகவே படத்தின் ஒரு பகுதியையோ, பாடல்களையோ வெளியிட்டுவிட்டு ஐயய்யோ .... எந்த அயோக்ய பயலோ இந்த வேலையை செஞ்சுட்டான் என்று அலறுவார்கள். அதுவே படத்திற்கு பாதி பப்ளிசிடி. மீதி பப்ளிசிடிதான் மாடு தின்னும் போஸ்டர்களும், மழையில் விழும் கட் அவுட்டுகளும்.
அப்படிதான் இந்த... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...