சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடபப்ட்ட ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகி இருக்க வேண்டிய படம் ‘தலைவா'. ‘தெய்வத்திருமகள்'விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘தலைவா'. விஜயின் ஜோடி அமலாபால்.
சிலப் பல காரணங்களால் அப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கும் சூழ்நிலையில் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். கோயமுத்தூரில் ஒரு ரசிகர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் தொடர்ந்து திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுதல் கூரி வரும் வேளையில், திரைத்துறையில் இரு வேறு துருவங்களாக கருதப்பட்ட சிம்புவும் தனுஷ்ம், விஜய்க்கு ஆதரவாக ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
விஜய் அண்ணா...
இது குறித்து ட்வீட் செய்துள்ள சிம்பு, ‘விஜய் அண்ணா ரசிகர்களே, கவலைப்படாதீர்கள்... எப்போதும் மழை பொழிந்து கொண்டே இருக்காது. விரைவில் சூரிய வெளிச்சம் உதயமாகும். செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....