அப்பாடா... 'ஆரம்பம்' என்று தலைப்பு வச்சுட்டாங்க. அது போதும் என்று 'ஸ்வீட் எடு கொண்டாடு' மனநிலைக்கு வந்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்கள். ஆனால் இந்த தலைப்புக்கு பின்னால் நடந்த நாடகத்தை கேள்விப்பட்டால் 'ஐயோ தல' என்று தலை தலையாய் அடித்துக் கொள்ள நேரிடும்.
ஒரு ஹீரோ தன் படத்தின் கதைக்காக அதிகம் மெனக்கெடுவார். தாம் கேட்ட கதைக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு ஓரளவுக்கு பொருந்தி வந்தால் கூட ஓ.கே சொல்லும் மூடுக்கும் வந்து விடுவார். ஆனால் சமீப நாட்களாக கதையை விட தன் படத்தின் தலைப்பை வடிகட்டி வடிகட்டி சல்லடையையே ஓட்டையாக்கிவிட்டார் அஜீத்.
'கர்ஜனை' என்று ஒரு தலைப்பு சொன்னாராம் விஷ்ணுவர்த்தன். இது மாதிரி டெரர் லுக்கான டைட்டில்களை அவர் கொடுத்துக் கொண்டே வந்தாலும், 'இது சரியில்ல. அது வேணாம்' என்று அஜீத் சொல்லிக் கொண்டே வர, தமிழ்சினிமாவுல ஒரு தலைப்பை சுதந்திரமா வைக்கிற உரிமையை கூட விட்டுத்தர மாட்டேங்குறாங்களே இந்த ஹீரோக்கள் என்கிற அளவுக்கு எரிச்சலானாராம் விஷ்ணு. இந்த நேரத்தில் ஆரம்பம் என்ற தலைப்பு விஷ்ணுவின் நெற்றிக்குள் உதித்தது.
இந்த முறை அஜீத்திடம் சொன்னால்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...