சினிமாவில் நடிகைகளின் காலம் மிகக் குறைவு எனலாம். கதாநாயகியாக நடிக்கும் நடிகைக்குத் திருமணம் முடிந்ததும் அக்கா, அண்ணி, ஏன் அத்தை, அம்மா அளவிற்குக் கூட நடிக்கக் கேட்பார்கள் இந்திய சினிமா துறை.ஆனால் ஹாலிவுட்டில் அப்படி இல்லை திருமணம் ஆன அதுவும் 40 வயதிற்கு மேல் சாதிக்கும் டாப் ஹீரோயின்கள் அதிகம்.ஏஞ்சலினா ஜோலி, மில்லா ஜோவோவிச், ஹாலே பெர்ரி, ஜெனிபர் லோபஸ் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இந்தியசினிமா ஹீரோயின்கள் நிலை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் ஓப்பனாக, நான் கால்கேர்ளாக இருப்பதில் தவறு ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளாராம்.சினிமா துறையில் 12 வருடங்களுக்கு மேல் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்த அவருக்கு,தற்சமயம் கையில் ஒரு படமும் இல்லை என்ற நிலையில் ஒரு இரவுக்கு 10 லட்சம் என்ற ரீதியில் கால் கேர்ளாக வேலை செய்கிறாராம் இந்த நாயகி.
மேலும் குறிப்பிட்ட அந்த ஹீரோயின் போலீஸில் சிக்கிய போது இதில் தவறு ஏதுவுமில்லையே எனவும் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர் தமிழ், தெலுங்கு என டாப் நாயகிகள் வரிசையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து நடித்த மற்றொரு நடிகை இன்னும் டாப் நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதில் வருத்தப்பட வேண்டிய ஒன்று அவரது அம்மாவும் இதற்கு சப்போர்ட் செய்வதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில் இப்போது இருக்கும் நடிகைகளுக்கான நிலை மாற வேண்டும். நல்ல நடிகைகள் திருமணமானால் என்ன ஆகாவிட்டால் என்ன? என்ற எண்ணம் திரைத்துறையில் வரவேண்டும்.