வாசகர்களுக்கு வணக்கம், நேற்று திரு. பி.டி.செல்வகுமார் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.தானு அவர்களுக்கு எதிராக ஆர்.கே.வி.ஷ்டூடியோவில் உண்ணா நோம்பு இருந்தார். இவர்கள் அவர் மீது கடும் விமர்சனங்களை வைத்தனர் இத்தனைக்கும் அந்த ஆர்பாட்டத்தின் தலைப்பே “தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள்” என்றுதான் இருந்தது, சிறுப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவுவதுயில்லையாம், தயாரிப்பாளர்களுக்கு அரசாங்கத்திடம் எந்த தொகையும் பெற்று தரவில்லையாம், படம் எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய அவர் பணம் கேட்கிறாராம் இதைப்போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் வைத்தனர்..
இதற்க்கு பதிலலித்த திரு.தாணு இனறு (நேற்று) சிலர் போராட்டம் செய்தனர் அதற்கு தலைமை தாங்கியவர் பி.டி.செல்வகுமார் என்பதை அறிந்து மனது கலங்கிவிட்டது. அதற்கு காரணம் அவர் புலி படம் எடுக்கும் போது வெளிநாட்டில் படப்பிடிப்பு முடிந்து திரும்பும் போது அந்த படத்தின் தயாரிப்பாளர் சிபு தமின்ஸ்க்கு 30 லட்சம் இருந்தால் தான் நாங்கள் நாடு திரும்ப முடியும் என்று கேட்டார் நான் உடனே சிங்கப்பூரில் இருந்த எனது நண்பருக்கு அழைத்து பணத்தை கொடுக்க சொன்னேன்.
அதே போல் போக்கிரி ராஜா படத்திலும் பணம் பற்ற குறை வந்த போது என்னிடம் வந்து ஐந்து லட்சம் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார் அதை இதுவரை திருப்பி கொடுக்கவில்லை பி டி செல்வகுமார்.
அவருக்கு இதுபோல் பல உதவிகள் செய்து இருக்கிறேன் அந்த நன்றிகளை மறந்து இப்படி என்மீது பலி சுமத்துகிறார். நான் நிஜம் அவர் வெறும் நிழல். நிஜம் இருந்தால் தான் நிழல் இருக்க முடியும் என்பதை மறந்து விடக்கூடாது என்று கூறினார்.
ஒருவேளை பி டி செல்வகுமாருக்கு பதவி ஆசை வந்துவிட்டதோ…. யாருக்கு தெரியும்…