பாகிஸ்தானில் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கராச்சியின் பிராபாத் பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பயந்து இதனை வெளியே சொல்லாமல் அவர்கள் வசித்து வந்து உள்ளனர். இந்நிலையில் அவரது இரண்டாவது மகள் அவரை தீ வைத்து எரித்துவிட்டார்.
இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ள இளம்பெண் பொலிஸாரிடம் கூறிஉள்ள தகவலில், என்னுடைய தந்தை என்னுடைய மூத்த மற்றும் இளைய சகோதரியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். என்னையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இந்நிலையில் அவருக்கு தூக்க மாத்திரையை கொடுத்துவிட்டேன். அவர் தூங்கியதும் தர, தர வென்று இழுத்து சென்று தீ வைத்து எரித்துவிட்டேன், என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளம்பெண் கராச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.