முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட சீனியர் நடிகைகள் அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா தற்போது ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ‘பாகுபலி’, ‘ருத்ரம்மா தேவி’, ‘அருந்ததி’, ‘இஞ்சி இடுப்பழகி’ படங்களில் நடித்த அனுஷ்கா தற்போது ‘பாகுபலி 2’வில் நடிக்கிறார். ‘மாயா’, ‘நீ எங்கே என் அன்பே’ ஹீரோயின் கதை அம்ச படங்களில் நடித்த நயன்தாரா தற்போதும் அதுபோன்ற கதைகளையே தேர்வு செய்கிறார். இந்த பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார் திரிஷா.ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் ‘நாயகி’. படத்தில் தற்போது நடித்து வருகிறார். அடுத்தும் இதுபோல் ஒரு கதையை தேடிக்கொண்டிருந்தார். இந்தியில் அனுஷ்கா சர்மா நடித்து வெற்றி பெற்ற ‘என்எச்10’ படம் ஹீரோயினை மையமாக கொண்ட கதை. அப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் நடிக்க குறி வைத்திருக்கிறாராம். அந்த படம் மீது அனுஷ்காவும், நயன்தாராவும் தங்களது பார்வை திருப்பி இருக்கிறார்கள்.

