Thursday, April 7, 2016

பாகுபலியில் தீபிகா... நல்லா கிளப்புறாங்கையா பீதியை



பாகுபலி இரண்டாம் பாகம் குறித்து வருகிற வதந்திகளைக் கேட்டால் பாகுபலியே மிரண்டு போவார். ஒவ்வொன்றும் அணுகுண்டு ரகம்.ராணாவின் மனைவியாக நடிக்க ஸ்ரேயாவை ராஜமௌலி ஒப்பந்தம் செய்துள்ளார் என்று முதலில் கூறினார்கள். பிறகு, ஸ்ரேயாவே, அப்படியெல்லாம் இல்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது, தீபிகா படுகோனே நடிப்பதாக கொளுத்திப் போட்டிருக்கிறது ஒரு கும்பல். கேட்கும் போதே வதந்தியின் தீய்ந்தவாடை அடிக்கிற இந்த செய்தியையும் உண்மை என்று சிலர் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.  திருந்துங்கப்பா.

Subscribe to get more videos :