விஷால் நடிக்கும் கத்தி சண்டை படத்தில் வடிவேலு மீண்டும் காமெடியனாக நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனாலும், சம்பந்தப்பட்டவர்கள் இந்த செய்தியை இன்னும் உறுதி செய்யவில்லை.ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லி வந்த வடிவேலின் ஹீரோ படங்கள் எதுவும் ஓடவில்லை. தெனாலிராமன், எலி என்று அனைத்துப் படங்களும் தோல்வியடைய, தற்போது வீட்டில் சும்மாதான் ஓய்வெடுக்கிறது வைகைப் புயல். இந்நிலையில், நடிகர் சங்கத்தில் விஷாலுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் கத்தி சண்டை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. கதாநாயகன் வடிவேலு அல்ல கைப்புள்ள வடிவேலைத்தான் தமிழகம் எதிர்பார்க்கிறது. இப்போதாவது இந்த உண்மை வடிவேலுக்கு புரிந்தால் சரிதான்.