ஊர் உலகத்தையே சிரிக்க வைத்த லூஸ்மோகனுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று யாரும் நினைத்திருக்க போவதில்லை. வயதான பெற்றோர்களை கைவிடும்பிள்ளைகளை தண்டிக்க இந்திய தண்டனை சட்டத்தில் 'இடம்' இருக்கிறது. ஆனால் பிள்ளைகளை தண்டிக்க வைக்கிறளவுக்கு 'இடம்' இல்லை பெற்றவர்களின் மனசில். அதனால்தான் பல பெற்றோர்கள் புகார் கொடுக்காமல் பொறுத்துக் கொள்கிறார்கள் இத்தகைய கொடுமைகளை.
நேற்று காலை காவல் நிலைய ஆணையர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கிய லு£ஸ் மோகன் கொடுத்த புகார் தமிழகத்தை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.
அதில், "எனது மகன் கார்த்திக், மனைவியுடன் சேர்ந்துகொண்டு சாப்பாடு போட மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் வேறு எதுவும் கேட்க வில்லை. மூன்றுவேளை சாப்பாடு கொடுத்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம்," என குறிப்பிடப்பட்டிருந்தது.
புகார் அளித்துவிட்டு வெளியேவந்து செய்தியாளர்களிடம் லூஸ்மோகன் கூறியதாவது:
சினிமாவில் பலரை சிரிக்க வைத்த எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது. எனது மனைவி 2004-ம் ஆண்டு இறந்து விட்டார். மகனுடன் நான் தங்கி இருக்கிறேன். அவரை நான்தான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டேன்.
கடந்த 3 நாட்களாக மனைவி பேச்சை கேட்டு அவர் வீட்டுக்கு வருவதில்லை. எனக்கு சாப்பாடு வாங்கி தருவது இல்லை. வயதாகி விட்டதால் காலையில் 2 இட்லியும், இரவு 2 இட்லியும் மட்டுமே சாப்பிடுகிறேன். அதைக் கூட தர மறுக்கிறார். எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. அதனால் தங்குவதற்கு பிரச்னை இல்லை. என் பையன் என்னை கவனித்து சாப்பாடு மட்டும் கொடுத்தால் போதும்," என்றார் கண்ணீருடன்.
கமிஷனரிடம் இவர் அளித்த புகார் மயிலாப்பூர் போலீசாருக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிடப்பட்டுள்ளார்.
இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் லு£ஸ் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.