ஒஸ்தி படத்தை தொடர்ந்து சிம்பு, அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில்
நடிக்கும், வட சென்னை படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.
தனுஷின் ஆஸ்தான இயக்குநரான வெற்றிமாறன், ஆடுகளம் படத்திற்கு பிறகு இயக்க
இருக்கும் படம் வட சென்னை.
வெற்றிமாறனின் முந்தைய படங்களை போன்று,
இந்தபடத்திலும் தனுஷ் தான் நடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,
தனுஷை விட்டு சிம்புவை தேர்வு செய்து இருக்கிறார் வெற்றி. மேலும் படத்தில்
இரண்டாவது ஹீரோவாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில்
படத்தின் நாயகியாக யார் நடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,
அமலா பாலை தேர்வு செய்து இருப்பதாக தெரிகிறது. அதேபோல் ராணா டகுபதிக்கு
ஜோடியாக ஆன்ட்ரியாவை நடிக்க வைக்க இருக்கிறார் வெற்றிமாறன். படத்தில்
சிம்பு-ராணா இருவருக்கும் சமமான கேரக்டர் தானாம். அதேபோல் அமலாபால்,
ஆன்டிரியாவுக்கும் சமமான கேரக்டர் தானாம். குறிப்பாக அமலாபால்க்கு இணையான
காட்சிகள் இருந்தால்தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டுதான் நடிக்கவே
சம்மதித்தாராம் ஆன்ட்ரியா. படத்திற்கான வேலைகள் ஆரம்பமாக உள்ளது.