ஆபாசமாகவும், ஐ லவ் யூ சொல்லியும் நடிகை ப்ரியாமணிக்கு, ரசிகர்கள் சிலர்
தொந்தரவு செய்ததாக வந்த செய்தியை ப்ரியாமணி மறுத்துள்ளார். பருத்திவீரன்
படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியாமணி. ஆனால் அந்த படங்களுக்கு
பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு, எந்தபடமும் சரியாக போகவில்லை
ப்ரியாமணிக்கு. இதனால் தமிழை விட்டு தெலுங்கு பக்கம் தாவினார். தற்போது
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்
ப்ரியாமணிக்கு ரசிகர்கள் சிலர் போனில், ஐ லவ் யூ சொல்லியும், ஆபசமாக
எஸ்.எம்.எஸ் அனுப்பியும் தொந்தரவு செய்ததாக தகவல் வெளியானது. மேலும்
பெரும்பாலான நேரங்களில் தனது செல்போனையும் சுவிட்ஜ் ஆப் செய்து விடுகிறார்
என்றும் பேசப்பட்டது. ஆனால் இதனை ப்ரியாமணி மறுத்துள்ளார்.
இதுகுறித்து
ப்ரியாமணி கூறுகையில், எனக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியும்
பேசியும் தொல்லைகள் செய்வதாக செய்தி பரவியுள்ளது. அப்படி எதுவும் இல்லை.
கற்பனையாக அந்த செய்தி பரப்பப்பட்டு உள்ளது. நான் எப்பவு போல, என்னுடைய
பழைய நம்பரைத்தான் பயன்படுத்துகிறேன். என்னை சுற்றி உள்ள நண்பர்களுடன்
மகிழ்ச்சியாக பேசுவதையும் நிறுத்தவில்லை. தற்போது தெலுங்கு மற்றும் கன்னட
படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன் என்றார்.