Saturday, October 29, 2011

இந்த பொழப்பு என்னோட போகட்டும்.. நடிகை பூர்ணா..!!


Actress Poorna

நடிகை ஒருவரின் 5 தங்கைகளுக்கு தமிழ் சினிமா டைரக்டர்கள் வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகையோ இந்த பொழப்பு என்னோட போகட்டும்; அவங்களாவது படித்து பெரிய அதிகாரி ஆகணும் என்று கூறி நடிப்பு உலகத்துக்கு வர தடை போட்டு விட்டாராம். ஆறு பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்றொரு பழமொழி உண்டு. அப்படி 5 தங்கைகளுடன் பிறந்திருக்கிறார் நடிகை பூர்ணா. ஆனால் அவரது குடும்பம் இப்போது மிக மகிழ்ச்சியாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் பூர்ணாதான்.


படித்துக் கொண்டிருந்த போதே ஸ்கூல் டிராமாவில் நடித்த பூர்ணாவை பார்த்த சினிமாக்காரர்கள் அப்படியே அள்ளிக் கொண்டு வந்தார்கள். தனது 5 தங்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்த பூர்ணா படிப்பை விட்டுவிட்டு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். படங்கள் எதுவும் வெற்றி பெறாவிட்டாலும், எப்படியோ போராடி சொந்த ஊரில் பெரிய பங்களா கட்டிவிட்டார். இப்போது தனது தங்கைகளுடன் அந்த வீட்டில் சந்தோஷமாக இருக்கும் பூர்ணாவுக்கு ஒரே ஒரு கவலைதானாம். 

தங்கைகளையும் சிலர் நடிக்க அழைப்பது பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறாராம் அம்மணி. வாய்ப்புகளுடன் தேடி வந்த டைரக்டர்களிடம், இந்த பொழப்பு என்னோட போகட்டும்; அவர்களாவது படித்து பெரிய பெரிய அதிகாரி ஆகணும். அவர்களை விட்டுடுங்களேன் என்று கெஞ்சாத குறையாக அனுப்பி வைக்கிறாராம்.



ரொம்ப நல்ல மனசு தாயி... இப்படியே இருங்க...!!!

Subscribe to get more videos :