சிம்புன்னா சிக்கல், சிக்கல் இருக்குமிடம் சிம்பு இருக்கும் இடம் என பல ஆண்டுகளாக கூவி கூவி அது இப்போ ஆவியா போச்சு இனி சிம்புன்னா அமைதின்னு சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப மறுபடியும் இரு சிக்கலில் சிக்கி, அவரது தந்தை பிரஸ் மீட் வச்சி என் பையன் எந்த பொண்ணையும் நிமிர்ந்து கூட பாக்க மாட்டன்னு(உடம்பெல்லாம் கூசுமே) ஸ்டேட்மண்ட் தர ஆரம்பிச்சிட்டாரு. இப்ப அவரு சிக்கி இருப்பது ஏற்கனவே கல்யாணம் ஆனா பெண்ணிடம் சில்மிஷம் செய்த 6 பேரும் சிம்புவின் நண்பர்களாம். இதன் விரிவான செய்தி பின்வருமாறு..பெண்ணிடம் சில்மிஷத்திலும் தாக்குதலிலும் ஈடுபட்டதாக அந்த 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் நடிகர் சிம்புவின் நண்பர்கள் என்று செய்தி வெளியானது.
இதனை சிம்புவின் தந்தையும், சினிமா இயக்குனருமான டி.ராஜேந்தர் மறுத்தார். அவர் கூறுகையில், "சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. சிம்பு நடிகர் என்பதால் செல்லும் இடங்களில் நிறைய பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் (அது ஓட்டலாமா...!!!) ஒன்றுக்கு செல்லும்போது பலர் இதுபோல் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களையெல்லாம் நண்பர்கள் என்று சொல்ல முடியுமா?ஏற்கெனவே ஒரு முறை சிம்பு குடித்துவிட்டு தகராறு செய்ததால் குடிசைப் பகுதி மக்கள் அடித்து உதைத்ததாக செய்தி வெளியானது. உடனே பிரஸ் மீட் வைத்து மறுப்பு தெரிவித்த டி ராஜேந்தர், என் மகனுக்கு குடிக்கவே தெரியாது என்று கூறி கண்கலங்கி பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம்!
