டைரக்டர் வெங்கட்பிரபுவிற்கு கவர்ச்சி நடிகை சோனா மறைமுகமாக மிரட்டல் விடுத்திருக்கிறாராம். மங்காத்தா பட வெற்றியை கொண்டாடும் வகையில் நடைபெற்ற மது விருந்தில் நடிகை சோனா பங்கேற்றதும், அப்போது எஸ்.பி.பி.சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பரபரப்பு புகார் கூறியதும் பழைய சங்கதி. அந்த சர்ச்சையின் ஆரம்பத்தில் சரணுக்கு தண்டனை வாங்கித் தராமல் தூங்க மாட்டேன் என்று வீராப்பு வசனம் பேசிய சோனா, அடுத்த சில நாட்களில் வழக்கை வாபஸ் பெற்று விட்டு வெளிநாட்டுக்கு பறந்ததும், மன நிம்மதிக்காக நான் வெளிநாட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டும் பறந்தார்.
பிரச்சனைக்கு காரணமான நடிகை சோனாவுக்கு இனிமேல் படம் இயக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த வெங்கட்பிரபு, சோனாவிடம் வாங்கிய அட்வான்சை திருப்பி தருவதாக உறுதியளித்தார். ஆனால் சொன்னபடி வெங்கட்பிரபு இன்னும் முழு பணத்தையும் செட்டில் செய்யவில்லையாம். ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபுதான் இயக்கவிருக்கிறார். இந்த முறை சோனா வேறு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. நேராக ஞானவேல்ராஜாவையே தொடர்பு கொண்டாராம்.
ஒரு தயாரிப்பாளரோட(இவங்க(சோனா) தயாரிப்பாளராம்ல) கஷ்டம் இன்னொரு தயாரிப்பாளருக்கு தெரியும் என பஞ்ச் டயலாக் பேசாத குறையாக ஞானவேல்ராஜாவிடம் முறையிட்டிருக்கிறார். எனக்கு தர வேண்டிய அட்வான்ஸ் தொகையை வட்டியோடு திருப்பி கொடுக்க சொல்லிவிட்டு உங்கள் படத்தை அப்புறம் ஆரம்பிங்க. இல்லையென்றால், நீங்கள் படத்தை ஆரம்பிக்கும் முன்பே நான் சங்கங்களில் புகார் செய்வேன். அது உங்களுக்குதான் கெட்ட பெயர். வெங்கட்டிடம் சொல்லுங்க என்றாராம். இந்த மறைமுக மிரட்டலுக்கு வெங்கட்பிரபு என்ன பதில் சொல்லப் போகிறாரோ?!