Monday, November 14, 2011

அட்ரஸ் தொலைத்த நடிகைகள்...!!

தப்பான அட்ரசுக்கு போன தந்தி மாதிரி, அழகிருந்தும் நிராகரிக்கப்படும் நடிகைகள் அநேகம் பேர் இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். தங்க வேட்டை நடத்தும் வேகத்தோடு வந்த இவர்களுக்கு தகரம் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி, லிப்ஸ்டிக்கும் வெற்று சிரிப்புமாக வாழ்க்கையை முடித்திருப்பார்கள். நாம் பார்க்கும் அநேக துணை நடிகைகள் ஒரு காலத்தில் இன்டஸ்ட்ரியை புரட்டிப் போடும் லட்சியத்தோடு இப்படி ரயிலேறி வந்தவர்கள்தான்.

ஆனால் பெரிய ஹிட் படத்தில் அறிமுகமாகி, அசர வைக்கும் அழகும் கொண்ட சில நடிகைகள் அதன்பின் காணாமல் போனது ஏன் என்று ஆராய்ந்தால் பெரிய கேள்விக்குறியே மிச்சமாகும். சமீபத்தில் வெளிவந்து அந்த வருடத்தின் மாஸ் ஹிட் வரிசையில் இடம் பிடித்த கோ படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படத்தில் நடித்த ராதா மகள் கார்த்திகா, அதன் பின் என்னவானார்? ஆந்திராவுல கூப்பிட்டாக, கேரளாவுல கூப்பிட்டாக என்று பத்திரிகைகளில் அவ்வப்போது பேட்டி வந்ததே ஒழிய அடுத்த படத்திற்கான அறிவிப்பு மட்டும் வரவேயில்லை. நல்லவேளையாக பாரதிராஜாவே கை கொடுத்திருக்கிறார் இப்போது. இவர் இயக்கப் போகும் அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்தில் கார்த்திகாவும் ஒரு ஹீரோயின்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராதா, என்னுடைய இரண்டாவது மகளை சினிமாவில் நடிக்க வைக்கப் போறதா எழுதுறாங்க. உண்மையில் என்னோட முதல் மகளுக்கே சரியான கதையும் பொறுத்தமான புராஜக்டும் அமையல. நிறைய படங்கள் வருது. ஆனால் எல்லாத்தையும் ஒப்புக் கொள்ள முடியாதே என்று கூறியிருக்கிறார். இத்தனைக்கும் கோ படத்திற்கு பிறகு...

மேலும் படிக்க... http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/nov/141111.asp

Subscribe to get more videos :