Monday, December 5, 2011

போராளி- திரை விமர்சனம்


'போராளி' என்று தலைப்பை கேட்டதும் சீமான், சிறுத்தைகளுக்கெல்லாம் வேலை வைப்பார்களோ என்ற சந்தேகத்தோடு உள்ளே போனால், அங்கே இவர்கள் காட்டுகிற போராளி வேறு. 'என்னோட நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன்தான்' என்கிறார்கள் இந்த படத்திலும். வேதியல், பொருளியல், இயற்பியல் தத்துவத்தையெல்லாம் தாண்டிய இந்த ஃபிரண்ட்ஷியல் தத்துவத்திற்கு, தியேட்டரே எழுந்து நின்று கைதட்டுகிறது. சமுத்திரக்கனியின் இந்த 'கனியிருப்ப காய் கவர்ந்தற்று...' பாணிக்கும் ஒரு சிறப்பு சல்யூட்.

ஒரு வினோதமான குடியிருப்பில் வசிக்கும் கஞ்சா கருப்புவின் ரூமிற்குள் தஞ்சம் புகுகிறார்கள் சசிக்குமாரும், அல்லரி நரேஷும். பிடிவாதமாக அங்கே தங்க துவங்கும் அவர்கள், அக்கம் பக்கத்தினர் மனதில் இடம் பிடிப்பதோடு அருகாமையிலிருக்கும் பெட்ரோல் பங்கிலும் வேலை செய்கிறார்கள். ஓய்வு நேர பணியாக இவர்கள் செய்யும் தொழில் ஒன்று ஒரே வாரத்தில் பிய்த்துக் கொண்டு பறக்க, போட்டோவுடன் விளம்பரம் கொடுக்கிறார் கருப்பு. அதை பார்த்துவிட்டு ஒரு கும்பல் இவர்களை விரட்டுகிறது. அப்புறமென்ன, ஓடுகிறார்கள் நரேஷும், சசியும். ஏன் இந்த ஓட்டம் என்பதை விளக்குகிறது பின்பாதி பிளாஷ்பேக். 

முதல் பாதியில் காத்தாடி மீது கதை எழுதிய மாதிரி சுலபமாக பறக்க துவங்குகிற கதை, இரண்டாம் பாதியில் கல்லையும் கட்டிக் கொண்டு பறக்க துவங்குகிறது. முக்கி முக்கி பறந்தாலும்...

மேலும் படிக்க...

Subscribe to get more videos :