மஹாராஷ்டிரா சேட்டு ஃபிகரை, மைலாப்பூர் மாட்டுப் பெண்ணாக்கியிருக்கிறார் ஷங்கர். அப்படியொரு கனக்கச்சிதமான ஃபிட்டிங்! ஜெயம் ராஜா போன்ற 'ரீமேக் வைத்தியர்களுக்கு' மட்டுமே சாத்தியப்பட்ட இந்த கலையில் ஷங்கரும் டாக்டரேட் வாங்கியிருக்கிறார் என்பதுதான் 'நண்பன்' வட்டாரத்தின் நற்செய்தி. ஒரிஜனலான த்ரி இடியட்ஸ்சை நம்மில் பலரும் பார்த்து தொலைத்ததால் வந்த விளைவுதான் இந்த ஒப்பீடு. இல்லையென்றால் அதற்கும் அவசியம் இல்லையே!
பத்தாம்ப்பு பாஸ் பண்ணுவதற்கு பாண்டிச்சேரி கல்வி மந்திரி என்னவெல்லாம் பாடு பட்டு, எப்படியெல்லாம் கம்பி எண்ணினார் என்பதை படம் முடிந்து வெளியே வரும்போது மீண்டும் நினைவு கூர வைக்கிறார் ஷங்கர். படமும் இக்கால கல்வி முறை குறித்து நிறைய கேள்வி எழுப்புகிறது. (ஷங்கரின் ஊறுகாய், எந்த காலத்தில் சப்பென்று இருந்ததாம்?)
நண்பன் விஜய்யை தேடி கல்லு£ரியின் பழைய நண்பர்களான ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன் மூவரும் போகிறார்கள். கூடவே விஜய்யின் காதலி இலியானாவும் ஒட்டிக் கொள்கிறார். அவரது முகவரியில் போய் பார்த்தால் அங்கு விஜய் பெயரில் இருப்பது எஸ்.ஜே.சூர்யா. இவருக்காக அவர் பரீட்சை எழுதியிருக்கிறார் என்பதும், பணக்கார சூர்யாவுடைய வேலைக்காரர் மகன்தான் விஜய் என்பதும் தெரியவர, விஜய்யை தேடுகிறது நண்பன் வட்டாரம். அவர் என்னவானார் என்பதுதான் முடிவு.
ஒரு மரத்தையே பிடுங்கி அடிக்கும் மாஸ் ஹீரோக்கள், இதுபோன்ற யதார்த்த படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய ஆச்சர்யம். அதிலும் பஞ்ச் டயலாக் இல்லாத விஜய் எந்த இடத்திலும் நம்மை அலுக்க விடவில்லை. கதை மேலிருக்கும் இவரது நம்பிக்கைக்கு முதல் சபாஷ். இந்த படத்திற்கு பிறகு விஜய்யை பிடிக்காதவர்களுக்கும் அவர் மீது ஒரு ஈர்ப்பு வரும்... மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

