97 ம் வருஷத்திலேயே 50 கோடி பட்ஜெட் என்றால், இப்போது எத்தனை கோடிகளை விழுங்குமோ? ஆனால் சுமக்க தயாராகிவிட்டார் கமல். இது மருதநாயகம் படத்தின் லேட்டஸ்ட் நிலவரம். மும்பை இதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கிற கமல், மீண்டும் மருதநாயகத்தை
துவங்கப் போவதாகவும், அதில் தன்னுடன் சேர்ந்து ரஜினி நடிப்பார் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் நம்பர் ஒன் சம்பளக்காரராக முன்னேறி விட்டார் ரஜினி. அமிதாப் ரஜினியை தவிர இந்தளவுக்கு சம்பளம் யாராலும் வாங்க முடியாது என்கிற அளவுக்கு ரஜினி பட பிசினஸ் தாறுமாறாக இருக்கிறது. மருதநாயகம் என்ற பாறாங்கல்லை தன் ஒற்றை புஜத்தால் தள்ள முடியாது என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் கமல், ரஜினியை துணைக்கு அழைத்துக் கொண்டதில் வியப்பொன்றும் இல்லைதான்.
ஆனால் இந்த படத்தை எப்போது மீண்டும் துவங்குவார்கள் என்பது குறித்து அந்த பேட்டியில் கூறவில்லை கமல். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் கமல் நடிக்கிறார். அதை ஷங்கர் இயக்குகிறார் என்பது கிட்டதட்ட முடிவாகிவிட்டதாம். இதில் ஜாக்கிசான், அப்படியே அஜீத், அர்ஜுன் என்று... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...