Saturday, February 18, 2012

அம்புலி - திரைவிமர்சனம்


அம்புலியே அம்புலியே... நம்புலியே நம்புலியே...' என்ற டி.ராஜேந்தரின் புகழ்பெற்ற பாடல் வரிகளோடு இந்த விமர்சனத்தை துவங்குவதுதான் சாலப் பொருத்தம். ஏதோ புதுசா 'ட்ரை' பண்ணியிருக்கோம். பார்த்துட்டு சொல்லுங்க என்கிற டைப் இல்லை இந்த படம். அசர வைக்கிறது அந்த 3டி தொழில் நுட்பம். விட்டால் தியேட்டரில் சுண்டல் விற்கிற பையன், ஸ்கிரீன் பக்கமும் திரும்பி ஹீரோயின் கையிலும் ஒரு பொட்டலத்தை கொடுக்க எத்தனிக்கிற அளவுக்கு அந்த தொழில் நுட்பம், எழில் சுத்தம்! ஆனால் ஒரு த்ரில்லர் படத்துக்கு அது மட்டும் போதுங்களா அண்ணாச்சி? 

பவுர்ணமி தினத்தன்று உமா ரியாசுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் அது குழந்தையல்ல, கொடூரமான மிருகம். கிராமத்திலிருக்கிற சோளக் கொல்லையில் தஞ்சம் புகுந்திருக்கும் அந்த மிருக மனிதன், அந்த பக்கமாக வருகிற அத்தனை பேரையும் அபேஸ் பண்ணி விடுகிறான். இதனால் ஊருக்கும் கொல்லைக்கும் நடுவே மதில் சுவரே எழுப்பி வாழ்கிறார்கள் மக்கள். இந்த நேரத்தில்தான் அந்த மனித மிருகத்தை தேடி புறப்படுகிறார்கள் இரு நண்பர்கள். அவர்களின் கதி என்ன என்பதை ஒரு காதலையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான ஹரி ஷங்கரும் ஹரிஷ் நாராயணும். 

மொட்டை ராஜேந்திரனுடன் சோளக்காட்டு வழியே போக அச்சப்பட்டு 'அப்பா வேணாம்ப்பா' என்று அழும் அந்த சிறுமி மட்டும் அப்படியே கண்களில் நிற்கிறாள். அவளையும் ஸ்வாகா செய்யும் அந்த மிருக மனிதன் ஐயோ பாவம். கடைசி வரை குரங்கு சேட்டைகளை மட்டுமே செய்து செத்துப் போகிறார். 

இந்த படத்தில் பார்த்திபனும் நடித்திருக்கிறார். 'ஆயிரத்தில் ஒருவன்' வந்தாலும் வந்தது. இவரையும் இவருக்கான காஸ்ட்யூமையும் ஒரு தினுசாகவே யோசிக்கிறார்கள் இயக்குனர்கள். இந்த படத்திலும் பார்த்திபனை பார்த்து பச்சை குழந்தைகள் அழும். ஆனால் நிஜத்தில் அவர் வில்லனும் அல்ல, ஹீரோவும் அல்ல என்பதுதான் வேதனை. 

தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


Subscribe to get more videos :