‘நான் அமைதியாக இருக்க விரும்பினாலும் சிலர் விடாமல் என்னைத்துரத்திக்
கொண்டு தொந்தரவு செய்கிறார்கள்’ என்று பரிதாபமாகப் புலம்புபவர் நம்ம த்ரிஷா தான்.என்னவாம்? ‘வாமனன்’ படத்தை இயக்கிய அஹமது இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகியிருந்தார் அல்லவா? அதிலிருந்து இப்போது பின் வாங்கி விட்டார்.அவர் இனி தமிழ்ப்படங்களில் நடிக்க விரும்பவில்லை. தெலுங்கிலேயே செட்டில் ஆக விரும்புகிறார் என்று யாரோ மூச்சு விடாமல் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்களாம். இவை அத்தனையுமே வடி கட்டிய பொய்கள்.

நான் அஹமது படத்தை விட்டு வெளியேறப் போவதாக யாரிடமும் ஒருபோதும் சொன்னதில்லை. இவற்றை எல்லாம் எந்த நடிகை கிளப்பி விடுகிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இதே வேலையை பதிலுக்கு நான் செய்ய ஆரம்பித்தால் அவர் சொந்த ஊரான கேரளாவுக்கு ஓட வேண்டியிருக்கும். ஜாக்கிரதை’ என்று அனல் தெரிக்க ஆவேசப்படுகிறார் த்ரிஷா.
மேலும் சினிமா செய்திகளை படிக்க : www.tamilcinema.com