பாற்கடலை கடைஞ்சா பஞ்சாமிர்தமும் வரும், பாம்பு விஷமும் வரும். எது நமக்கு வாய்க்குமோ என்கிற அச்சம் பெரிய படங்களை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு இருக்கும். ஆனால் விஷம் வந்தாலும் சரி, விஷயம் வந்தாலும் சரி. எனக்கெதுக்கு அதெல்லாம்? கொடுத்த பணத்துக்கு வட்டி போதும் என்று 'துப்பாக்கி'யை மறுத்தவரின் கதைதான் இது.
ரெண்டு ஹீரோக்களுக்கு அப்பா இவர். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புது இயக்குனர்கள் ஏராளம். தற்போது பட தயாரிப்பை விட்டொழித்துவிட்டு தனது மகனின் வெற்றியை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்கிறார் மனிதர். சினிமா தவிர வேறு பிசினஸ்களில் கொடிகட்டி பறக்கும் இவர், சினிமாவை தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார் இப்போது.
துப்பாக்கி ரிலீஸ் நேரத்தில் சுமார் பத்து கோடி ரூபாய் தேவைப்பட்டதாம் தயாரிப்பு தரப்புக்கு. இவரை அணுகி விஷயத்தை சொன்னவர்கள், துப்பாக்கியில் வர்ற ஷேர் உங்களுக்கு தர்றோம். பணத்தை கடனா கொடுக்கறதை விட பர்சன்டேஜ் பார்ட்னர்ஷிப்ல கொடுங்களேன் என்றார்களாம்.
அது நூறு கோடி கூட சம்பாதிக்கட்டும். எனக்கு வேணாம். என் பணத்துக்கு ஒரு வட்டி போட்டுக் கொடுங்க போதும் என்றாராம் இவர். சொன்ன மாதிரியே பத்துகோடியை கடனாக கொடுத்திருக்கிறார். தொடர்ந்து இந்த செய்தியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...