'துங்க கரிமுகத்து து£மகனை' பக்தி படங்களுக்கும், பாப்பா படங்களுக்கும் மட்டுமே பயன்படுத்திய தமிழ்சினிமாவில் அந்த கருத்த பெருத்த உருவத்தை முதன்முறையாக வேறொரு லொக்கேஷனில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் பிரபுசாலமன். இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கு ஆயிரம் தும்பிக்கைகளின் ஆசிர்வாதம் நிச்சயம்.
மலைகிராமத்து பயிர்களை மானாவாரியாக தின்று தொலைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், உயிர்களையும் பந்தாடிவிட்டு போகிறான் 'கொம்பன்' என்கிற காட்டு யானை. தமிழ்சினிமாவில் இன்றுவரை வந்த வில்லன்களையெல்லாம் தின்று செரித்துவிட்ட ஆக்ரோஷத்துடன் திரிகிற அவனை தீர்த்துக்கட்ட முடியாமல் கையை பிசைகிறது அந்த மலைகிராமம். யானைகளை விரட்டுவதற்காக பழக்கப்பட்ட கும்கி யானையை கூட்டிவரலாமே என்ற யோசனைக்கு செவிசாய்க்கும் ஊர் பெரிசுகள் அதற்காக மெனக்கெட, வந்து சேர்கிறான் மாணிக்கம். சரியான தும்பிக்கை நடுங்கி... இவனை சண்டைக்கு பழக்குவதற்காக ஒரு எருமையை கொண்டு வந்து நிறுத்தினால்கூட அதற்கே தடதடக்கும் அப்பாவி.
இந்த டூப்ளிகேட் கும்கி, கொம்பனை வென்றதா? இது மெயின் கதை. அப்படியே பாகனுக்கும் அந்த ஊர் தேவதை ஒருத்திக்கும் ஏற்படும் காதல் கிளைக் கதை. ஒரு கட்டத்தில் இந்த கிளைக்கதையே மெயின் கதையை ஃபுல் மீல்ஸ் ஆக்கி மென்று விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி, 'என்ட் கார்டு' போடுகிறார் பிரபுசாலமன்.
இப்படி ஒரு புதுமையான கதையில், காதல் தேவைதானா என்று ஒரு சாரரரும், கண்டிப்பாக தேவைதான் என்று இன்னொரு சாரரும் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு பட்டிமன்றம் நடத்துவது தனிக்கதை!
தொடை நடுங்கி ஹீரோக்கள் யாரும் தொடவே அஞ்சுகிற முரட்டுக் கேரக்டர் அறிமுக ஹீரோவான விக்ரம் பிரபுவுக்கு. இவர் யானையை படுக்கப் போட்டு குளிப்பாட்டுகிற காட்சிகளில் நமக்கு நெஞ்சுவலி வருகிறது. யானையின் காலில் ஏறி, அசால்டாக முதுகுக்கு தாவும் அவரது டெக்னிக், நிஜ பாகன்களையே கூட 'நீட்' சொல்ல வைக்கும். பல நேரங்களில் அதன் முதுகில் ஏறி உலாவரும் அந்த அழகு, விக்ரமுக்கு தனி கம்பீரத்தை கொடுக்கிறது. ஆனால் ஒரு அழகியை பார்த்த மாத்திரத்தில் இவர் காதல் படுகுழியில் விழுந்து தொலைப்பதுதான் ஜெனிட்டிக்காக ஊறிப்போன சினிமாட்டிக் நெருடல்.
முதல் படத்திலேயே அன்னை இல்லத்தின்... தொடர்ந்து விமர்சனத்தை படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...