பாலா எதை செய்தாலும் அதை 'கூலா' குத்தம் சொல்வது அமீருக்கு சந்தோஷம். அமீர் செய்கிற அரை செ.மீ. குற்றத்தை கூட அரவமில்லாமல் பரிகாசம் செய்வது பாலாவின் லீலை!
'இவன்தான் பாலா' என்று பாலா கட்டுரை எழுதினால், 'எவன்தான் பாலா' என்று எதிர்பாட்டு படிப்பார் அமீர். சென்சார் ஆபிசர்கள் லஞ்சம் வாங்குவதாக அமீர் பேட்டியளித்தால், 'இல்லீயே... அவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்க' என்பார் பாலா.
இப்படி ரெண்டு பேருக்கும் நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் கெட்ட கரண்ட், எப்போது டிரான்ஸ்பார்மரை பொசுக்குமோ கவலை கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் இருவரது ரசிகர்களும். இந்த நேரத்தில் பாலா தவறவிட்ட ஒரு நல்ல விஷயத்தை கையில் எடுக்க பார்க்கிறார் அமீர்.
கோடம்பாக்கத்தில் அரசல் புரசலாக கசிந்திருக்கும் விஷயம் இதுதான். ஒரு காலத்தில் 'நான் கடவுள்' படத்தில் நடிக்க முதலில் பாலாவால் அழைக்கப்பட்டவர் அஜீத்துதான். இதற்காக நீண்ட தாடி, அதைவிட நீண்ட தலைமுடி என்று பல மாதங்கள் 'பரதேசி'யாகவே அலைந்தார் அஜீத். திடீரென ஒரு நட்ட நடுநிசியில் இவரை அழைத்து 'என் படத்தில் நீ இல்ல போ...' என்று கூறிவிட்டார் பாலா. ஆனால் அதையெல்லாம் நினைத்து தற்போது வருத்தப்படும் பாலா, 'ஆமா... அப்படி நடந்திருக்கக் கூடாது. ஃபியூச்சர்ல அஜீத் என் படத்திலும் நடிச்சாலும் நடிக்கலாம்' என்று.... மேலும் செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....