Wednesday, March 6, 2013

சந்தமாமா - விமர்சனம்



'சொந்த பொண்டாட்டிக்கு மாமா' என்பதன் சுருக்கம்தான் 'சந்தமாமா' போலிருக்கிறது. நல்லவேளை... எழுத்தாளர் சங்கத்திலிருந்து யாரும் நோட்டீஸ் அனுப்பாமல் விட்டார்கள்! இப்படத்தின் கதை அவ்வளவு துக்கடா இல்லை. அதே நேரத்தில் கம்பியை பழுக்க வைத்து காது குடைகிற அளவுக்கு ரிஸ்க்கானது! ஆனால் எவ்வித வலிக்கும் இடம் தராமல் அதை சர்வ ஜாக்கிரதையாக பிரசன்ட் பண்ணியிருக்கிறார் புதுமுக இயக்குனர் ராதாகிருஷ்ணன். (கொஞ்சம் அசந்திருந்தா பார்சல்தாண்டீயேய்...)

குவார்ட்டரும் கொடுத்து கூடவே ரூபாயும் கொடுத்து அப்படியே தன் படங்களின் சினிமா டிக்கெட்டையும் தலையில் கட்டிவந்த ஜே.கே.ரித்தீஷ்கள், பவர் ஸ்டார் சீனிகள்தான் இந்த கதைக்கு கருவாக இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களை போலவே எழுத்தாளர் கருணாசும் ஒரு விளம்பர வித்தகர். அவர் எழுதிய எல்லா நு£ல்களும் சமுதாயத்தில் பெரும் கிலியை ஏற்படுத்தி விடுகிறது. சிலர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிற அளவுக்கு படுத்தி எடுக்கிறார் மனுஷன்.

இருந்தாலும் ஊரிலிருக்கிற சொத்துக்களையெல்லாம் சிறுக சிறுக விற்று மகனுக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கிறார் அப்பா. ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு ஆயிரம் ரூபாய் இலவசம் என்று பணத்தை தண்ணீராக வாரியிறைக்கும் இவருக்கு எழுத்தாளர் ஜெ.காந்தன் மூலம் அறிவுக் கண் திறக்கிறது. எந்தவொரு கதையையும் ஃபீல் பண்ணி எழுதணும் என்கிறார் அவர். இந்த நேரத்தில் இவருக்கும் ஸ்வேதாபாசுக்கும் கல்யாணமாகிறது.

கிளியை வளர்த்து கிங்காங் கையில் ஒப்படைத்த மாதிரி இவருக்கு மனைவியாக வந்து சேர்கிறார் ஸ்வேதா. திடீரென இவர்கள் லைஃபில் கிராஸ் ஆகிறார் பாடகர் ஹரிஷ். கருணாசை ஸ்வேதா வீட்டு வேலைக்காரர் என்று நினைத்து அவர் கையிலேயே அவருடைய மனைவிக்கு லவ் லெட்டர் கொடுக்க... இதையே கதையா எழுத ஆரம்பிச்சா என்ன என்று ஐடியா செய்கிறார் கருணாஸ். அதற்கப்புறம் தொடர்ந்து இந்த காதலை கணவன் கருணாசே முன்னின்று வளர்க்க, முகத்தை சுளித்துக் கொண்டே கணவருக்காக பொறுத்துக் கொள்கிறார் ஸ்வேதாபாசு. அப்புறம் என்னாச்சு? 

கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளம் அடிச்சுட்டு போச்சா என்பதுதான் மீதி!

எவ்வளவு அடிச்சாலும் தாங்குற அளவுக்கு அநியாயத்துக்கு அப்பாவியாக நடித்திருக்கிறார் கருணாஸ். வீட்டுக்கு ஃபேன் விற்க வந்த பெண்ணையே தன்னுடைய ஃபேன் என்று தப்பாக புரிந்து கொண்டு அவர் செய்யும் தோரணைகளும், வேறு சில காட்சிகளில் காட்டும் அலம்பல்களும் படு¢பயங்கர சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன தியேட்டரில். ஆனால் தன் மனைவியை நிஜமாகவே ரூட் விட்ருவானோ என்ற சந்தேகத்தில் அவர் பதறுவது பரிதாபம் நம்பர் ஒன்.

தமிழ்சினிமாவின் முந்தைய தெற்றுப்பல் அழகிகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறார் ஸ்வேதா பாசு. நினைத்தால் தமிழ்சினிமாவை ஒரு கை பார்க்கலாம். ட்ரை பண்ணுங்க....

ஹீரோவை போல அறிமுகமாகி வில்லனை போல பம்முகிறார் ஹரிஷ் கல்யாண். முன்ன பின்ன தெரியாத பையன்களிடம் முடிஞ்சளவுக்கு ஜாக்கிரதையாக இருக்கணும் என்கிற எச்சரிக்கை இந்த எபிசோட் பார்க்கிற பெண்களுக்கு தானாக வந்து சேரும்.  விமர்சனத்தை மேலும் தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...  


Subscribe to get more videos :