வீரப்பனுக்கு பிறகு இரு மாநில போலீசார் தேடுகிற ஒரே வி.ஐ.பி அஞ்சலிதான் போலிருக்கிறது. இந்த தேடுதல் வேட்டையில் சித்தியில் ஆரம்பித்து ஜெய் வரைக்கும் அஞ்சலிக்கு தெரிந்த அத்தனை பேரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீஸ், குணா கமல், அபிராமியை தேடியலைகிற மாதிரி அலைந்து கொண்டிருக்கிறது. ஆனால் அஞ்சலியோ தனது ஒரே செல்போனிலிருந்து ஆங்காங்கே சிலரிடம் பேசி 'ஐ ஆம் சேஃப்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். 'என் தங்கச்சிய காணலைங்க' என்று போலீசில் புகார் கொடுத்திருக்கும் அவரது அண்ணனுக்கு நேற்று வந்த செல்போன் அழைப்பில் பேசியது அஞ்சலியேதான். 'டேய்... கேஸை வாபஸ் வாங்குறா' என்று அவர் பேசியதை அப்படியே ஒலிபரப்பி உஷார் நிலையிலிருந்த தீயணைப்பு வண்டிகளை சற்றே ஆசுவாசப்படுத்தின ஆந்திர சேனல்கள்.
அப்படி என்னதான் பேசினார் அஞ்சலி. இதோ
அஞ்சலி:- ஹலோ... அண்ணா நான் பாலா பேசுறேன். (அஞ்சலியின் இயற்பெயர் பாலதிரிபுர சுந்தரி.)
ரவி சங்கர்:- ஏய் பாலா... நீ எங்கே இருக்கே?... நாலு நாளா நீ எங்கே இருக்கேன்னே தெரியவில்லை. ஏன் இத்தனை நாளா பேசவில்லை?
அஞ்சலி:- உன் செல்போன் நம்பர் என்னிடம் இல்லேடா... அதனால் அம்மாவிடம் வாங்கி பேசறேன்.
ரவி சங்கர்:- சரி பாலா... நீ நல்லா இருக்கியா? உனக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே?
அஞ்சலி:- நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு ஒன்றும் பயம் இல்லை. என்னோட ஒருத்தர் இருக்கிறார்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...