தமிழ்நாட்டின் சஞ்சய்தத் ஆகிவிட்டார் பவர்ஸ்டார் சீனி. இவர் வைத்த மோசடி குண்டுகள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த ஒரு காரணத்தால் மட்டும் அவர் சஞ்சய் ரேஞ்சுக்கு இகழப்படவில்லை. இவரை இன்று பதினைந்து நாள் காவலில் புழல் சிறைக்குள் தள்ளியிருக்கிறது சட்டம்.
நடுவில் ஜாமீனில் வந்தாலும் கூட, அதுவரைக்கும் என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறார்கள் சில சினிமாக்காரர்கள். அவரது கால்ஷீட் தேதிகளை வைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு நாள் குறித்து வைத்திருந்த பல சினிமா கம்பெனிகள் பேஸ்த் அடித்துப் போயிருக்கின்றன. இந்த கைது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருப்பது சுமார் நான்கு இயக்குனர்கள்.
பவர் வந்ததும் சமாளித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. அது போகட்டும்... இந்த முறை பவர் மாட்டியது எப்படி?
ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ரங்கநாதன் (வயது 60). இவர் தனது தொழில் அபிவிருத்திக்காக பலரிடம் கடன் கேட்டு இருந்தார். அப்போது 2 ஏஜெண்டுகள் அவரை சந்தித்தனர். ஒரு ஏஜெண்டு சென்னையைச் சேர்ந்தவர். மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர்கள் தங்களுக்கு தெரிந்த நபர் ஒருவரிடம் கடன் வாங்கித் தருவதாக கூறினார்கள். அதன் பேரில் இருவரும் பவர் ஸ்டார் சீனிவாசனை ரங்கநாதனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
ரூ.20 கோடி கடன் வாங்கித் தருவதாகவும் தனக்கு ரூ.50 லட்சம் கமிஷன் தர வேண்டும் என்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் கேட்டார். அதற்கு ரங்கநாதன் சம்மதித்தார். அதன்படி ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டு இதற்கான ஒப்பந்த பத்திரத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. சொன்னபடி பல மாதங்கள் ஆகியும் கடன் வாங்கித் தரவில்லை. கமிஷன் பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன் கடந்த அக்டோபர்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...